முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உடல்நலம் சரியில்லாத கணவருக்காக மனைவி செய்த செயல் இணையத்தில் வைரல்..!

உடல்நலம் சரியில்லாத கணவருக்காக மனைவி செய்த செயல் இணையத்தில் வைரல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனது மனைவி எப்படி தன்னைப் போல் நடித்து தனது அலுவலக பணிகளை செய்து முடித்தார் என்பது பற்றி Reddit யூசர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோன தொற்றுநோய்க்குப் பிறகு பல அலுவலகங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது ஒரு வழக்கமாகிவிட்டது. அதில் சில நன்மைகள் இருந்தாலும், அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டாலும் கூட குறிப்பிட்ட காலக்கெடுக்குள் வேலையை முடிக்க வேண்டுமென்பதை முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ளவர்களாலும் நமக்கு நிறைய தொந்தரவுகள் வரலாம். தனி அறைகள் இருந்தால் பரவாயில்லை, தனி அறை இல்லாமல் இருந்தாலோ, குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தாலோ வேலை செய்யும் நபரின் கதி அவ்வளவுதான். அன்றைய வேலையை அவர் செய்துமுடிப்பது என்பது சவாலான காரியமாக மாறிப்போகிறது.

இந்த நிலையில் ஒரு Reddit பயனர் ஒருவர் தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனது மனைவி எப்படி தன்னைப் போல் நடித்து அலுவலக பணிகளை செய்து முடித்தார் என்பதை பற்றி பகிர்ந்துள்ளார். Reddit பயனரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்து வேலை செய்யும் மென்பொருள் பொறியாளர்கள் ஆவர். அவர் ஒரு ஸ்டாக் டெவலப்பர் துறையில் இருவரும் பணி புரிந்து வரும் நிலையில், கணவன் செய்யும் அதே வேலையைச் செய்வதற்குத் தேவையான அனைத்து அறிவையும் அந்த மனைவி பெற்றிருந்தார். அவர் வேலை செய்யும் போது அந்த மனைவி சில சமயங்களில் அவருடன் அமர்ந்து coding போன்றவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை திருத்த உதவியிருக்கிறார்.

இது குறித்து வைரலான அந்த ரெடிட் இடுகையில், ஒருநாள் இரவு தனக்கு கடுமையான சளி மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு பிராஜெக்ட் திட்டத்தை முடிக்க அவரது அலுவலக முதலாளியிடமிருந்து அதிக அழுத்தம் தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தனது மனைவி அந்த வேலைகளை செய்து முடிப்பதாக உறுதி அளித்ததாகவும், தன்னை உடல்நலனில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகவும், அலுவலக நண்பர்கள் யாரேனும் செல்போனில் அழைத்தால், அவரது தொண்டை சரியில்லை எனக் காரணம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும், நெற்றியில் ஈரத் துணியுடன் சோபாவில் ஓய்வெடுத்தபோது தன் வேலையை ஒரிரு மணி நேரத்தில் அவள் செய்து முடித்ததாக அந்த பதிவில் கூறியிருக்கிறார். தனக்கு உதவியதற்கு அவளுக்கு ஒரு நல்ல இரவு விருந்து அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Reddit (@reddit)இது குறித்து Reddit தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளி வீசிவருகின்றனர். மேலும் கணவருக்கு உதவிய அந்த மனைவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. மேலும் தொழிலாளர்கள் நோய்வாய்பட்டாலும் வேலையை செய்துமுடிக்க வற்புறுத்தும் நிறுவன முதலாளிகளுக்கு எதிராக நெட்டிசன்கள் இடையே ஒரு விவாதமே நடைபெற்றுள்ளது.

First published:

Tags: Trending, Viral