ஆப்ஸ் அடிப்படையிலான கேப் சர்விஸ் (cab service) இந்தியாவில் அறிமுகமானதிலிருந்து, அவை குறிப்பிட்ட இந்த துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக Ola, Uber உள்ளிட்ட நிறுவனங்கள் cab service துறையில் கோலோச்சி வருகின்றன.
ஆனால் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்வது மற்றும் தாமதங்கள் போன்ற மோசமான அனுபவங்களை பற்றி யூஸர்கள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் Uber-ன் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் Cab-ஐ ஓட்டுவதை கண்ட புக்கிங் செய்த யூஸர்களுக்கு வழக்கமான Uber சவாரி ஒரு மறக்க முடியாத தருணமாக மாறி உள்ளது. Uber-ன் உயரதிகாரி தாங்கள் புக்கிங் செய்த காரை ஓட்டியது பற்றிய தகவலை LinkedIn-ன் போஸ்ட்டில் அனன்யா திவேதி என்ற இளம்பெண் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஷேர் செய்து உள்ளார்.
அனன்யா திவேதி தனது இந்த அனுபவத்தை வெளியே செல்வது, மக்களை சந்திப்பது, தகவல்களுக்கு உங்களை வெளிப்படுத்துவது இவை அனைத்தும் அதிர்ஷ்டம் நம்மை வந்து சேரும் இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. "வீட்டில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்காது" என்று கேப்ஷனிட்டு ஷேர் செய்து இருக்கிறார். தான் புக் செய்த Cab-ன் பின்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டு டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பிரப்ஜீத் சிங்குடன் எடுத்து கொண்ட செல்ஃபியையும் இளம்பெண் அனன்யா திவேதி ஷேர் செய்து இருக்கிறார். குறிப்பிட்ட போஸ்ட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்காக வீட்டை விட்டு தான் வெளியே வந்ததாக விளக்கி இருக்கிறார். மேலும் தான் ஆஃபிஸ் செல்வதற்காக புக் செய்த Cab-ஐ ஓட்டியது யார் என்று யூகிக்கவும் என்று கேள்வி கேட்டு விட்டு, பின் அவரே தான் புக் செய்த Cab-ஐ ஓட்டியது Uber India-வின் தலைவர் பிரப்ஜீத் சிங் என்ற தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குர்கானில் உள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்வதற்காக Cab புக் செய்த போது இந்த அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டு உள்ளார் அனன்யா திவேதி. மேலும் இது குறித்து கூறியுள்ள அனன்யா Cab டிரைவரின் முகத்தை பார்த்த போது, ஏற்கனவே இவரை எங்கயோ பார்த்திருக்கிறோமே என்று முதலில் சற்று சந்தேகம் அடைந்து, பிறகு கூகுளில் Uber-ன் இந்திய தலைவரின் பெயரை தேடி பார்த்த போது இன்டர்நெட்டில் பிரப்ஜீத் சிங்கின் முகம் வந்தது. அப்போது தான் என் தன் கண்களையே என்னால் நம்ப முடிந்தது என்று குறிப்பிட்டு உள்ளார்.
உடனடி கர்மா கேள்வி பட்டதுண்டா? மனிதருக்கு ஒட்டகம் அளித்த ஸ்பெஷல் கர்மா - வைரலாகும் வீடியோ
களத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்ள Uber India-வின் தலைவர் பிரப்ஜீத் சிங் மேற்கொண்ட முயற்சிகளால் தூண்டப்பட்ட அனன்யா, "பிரச்சனைகளின் வேர்களை கண்டறிய இது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு உண்மையான பணிவும் மன உறுதியும் தேவை" என்றும் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து அனன்யாவின் போஸ்ட் விரைவில் வைரலாகியது. சிக்கல்களை தீர்க்கும் முயற்ச்சியில் பிரப்ஜீத் சிங்கின் தனித்துவமான அணுகுமுறைக்காக யூஸர்கள் அவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அனன்யா பெற்ற அனுபவத்தை போலவே அதே அனுபவத்தை பெற்றுள்ளார் மற்றொரு LinkedIn யூஸர் சௌரப் குமார் வர்மா. பிரப்ஜீத் சிங் தனது வாடிக்கையாளர்களை நன்றாகப் புரிந்துகொள்ள விரும்புவதாகவும், அதனால் தானே வண்டியை ஓட்டத் தேர்ந்தெடுத்ததாகவும் சௌரப் குறிப்பிட்டு இருக்கிறார். மற்றொரு யூஸரான மதுவந்தி சுந்தர்ராஜன், தான் புக் செய்த காரை டிரைவ் செய்த பிரப்ஜீத் சிங், அன்றைய தனது முதல் பயணி என்று கூறி வாழ்த்தியதாக குறிப்பிட்டு உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.