• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண் - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண் - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண்

எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வருபவர் தொழில்முறை வயலின் கலைஞரான மெலிசா வோயாஸ் (Mellisa Voyias). அங்கே சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பல பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது.

  • Share this:
நாம் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறோம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதிகம் பழகாத அல்லது தெரியாதவர்களுக்காக சிறிய விஷயம் செய்ய வேண்டும் என்றால் ஒரு முறைக்கு பல முறை யோசிப்போம். உலகளவில் இன்னும் நீடிக்கும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் பல்வேறு இயல்பு நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே அந்நாட்டின் பல முக்கிய நகரங்களில் முன்பை போலவே மீண்டும் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், வயலின் வாசிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. வயலின் வாசிக்கும் வீடியோ வைரலாகும் அளவிற்கு அப்படி என்ன அதில் இருக்கிறது என்றும் பலரும் நினைக்கிறார்கள். அந்த பெண் தனக்காகவோ, தனக்கு வேண்டியவர்களுக்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ வயலினை இசைக்கவில்லை.

மாறாக தனது வீட்டின் அருகில் புதிதாக குடி வந்திருக்கும் வீட்டாருக்காக வயலின் வாசித்ததே இதில் ஹைலைட். எதிர் வீட்டில் புதிதாக குடி வந்த ஒரு குடும்பத்தினருக்காக அவர் வயலின் வாசித்து கொண்டே சாலையை கடந்து சென்ற சம்பவம் அடங்கிய ட்விட்டர் வீடியோ தான், தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த பின்னணியை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வருபவர் தொழில்முறை வயலின் கலைஞரான மெலிசா வோயாஸ் (Mellisa Voyias). அங்கே சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பல பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது. மெலிசாவின் வீட்டருகே சமீபத்தில் திருமணமாகாத ஆண், பெண் என இருவர் புதிதாக குடியேறி உள்ளனர். கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் அவர்கள் தங்களது திருமணத்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக திருமணத்தை நடத்த முடியவில்லை. இதனால் 2 முறை அவர்களது திருமண முயற்சி தோல்வி அடைந்துள்ளது.



இதற்கு மேல் திருமணத்தை தள்ளி வைக்க மனமில்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்றி தங்களது திருமணத்தை வீட்டிலேயே நடத்த முடிவு செய்து செயலில் இறங்கினர். தன் வீட்டிலிருந்து இவர்களது திருமண முயற்சயை கண்ட மெலிசா, உடனே தனது வயலினை எடுத்து இசைத்து கொண்டே சாலையை கடந்து சென்று அவர்களது திருமண நிகழ்வை இசையுடன் உற்சாகமாக்க துவங்கினார்.

Also read... மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர்...!

திருமண உடையில் இருந்த மணமக்கள் இருவரும் இவரது இசையை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்து, மகிழ்ச்சி பொங்க அவர் வாசிப்பை கவனித்தனர். "திருமண கச்சேரியை" முடித்த மெலிசா வோயாஸிற்கு இருவரும் உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்து கொண்டனர். எதிர் வீட்டிற்கு புதிதாக வந்தவர்களை சூழ்நிலையறிந்து மகிழ்வித்த மெலிசாவின் செயல் நெட்டிசன்களை நெகிழ செய்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: