தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம் ஓடும் ரயிலின் கீழ் படுத்து உயிர்தப்பிய பெண்..

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம் ஓடும் ரயிலின் கீழ் படுத்து உயிர்தப்பிய பெண்..

train

ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் தண்டவாளத்திலேயே படுத்து உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  • Share this:
ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் தண்டவாளத்திலேயே படுத்து உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு பயங்கரமான வீடியோவில், ஒரு பெண் நகரும் ரயிலின் கீழ் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு உயிரை காப்பாற்ற முயன்றபோது அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 

ரயில் சிக்கனல்காக காத்திருந்தபோது ஒரு பெண், ரயில்வே தண்டவாளத்தில் அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்துள்ளார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்துவிட்டதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து நின்று விட்டார். அப்போது அங்கு நின்றவர்கள் பலர் அப்படியே அங்கு படுக்கும்படி கூறினர். இதனையடுத்து ரயில் மெதுவாக நகரும்போது அந்த பெண் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கிடப்பதை வீடியோவில் காணலாம். பின்னர் ரயில் கடந்து சென்ற பின் அந்த பெண் அதிஷ்டவசமாக உயிருடன் எழுந்திருக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த பலர் ஓடி சென்று அவரை பாதுகாப்பாக தூக்கி எழுந்து நிற்க உதவுகின்றனர்.   

இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ஷேர் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும், பல நூறு லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர், இந்த சம்பவம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர் அந்த பெண்ணின் கவனக்குறைவை விமர்சித்தனர்.

அவற்றில் சில, 

அந்த பெண் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புகிறேன் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


மற்றொருவர் 'லேடி ரஜினிகாந்த்' என கூறியுள்ளார்.

 
Published by:Ram Sankar
First published: