ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கப்புச்சின் வகை குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்மணி! எப்படி சாத்தியமானது?

கப்புச்சின் வகை குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்மணி! எப்படி சாத்தியமானது?

குரங்கால் வளர்க்கப்பட்ட பெண்மணி

குரங்கால் வளர்க்கப்பட்ட பெண்மணி

காட்டு விலங்குகளுடன் பழகுவதற்காக குரங்குகளுடன் எப்படி வாழ வேண்டும் என்பதையும், அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதையும் சாப்மேன் பகிர்ந்து கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையத்தில் பலவித விசித்திர மற்றும் வினோத கதைகளுக்கான இடம் உள்ளது. மக்கள் தங்களை பற்றி வெளிப்படுத்தவும், தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் எல்லையற்ற சுதந்திரம் இணையத்தில் உள்ளது.

இது நிச்சயமாக சுவாரஸ்யமான கதைகளை உருவாக்க வழி செய்கிறது. விலங்குகளின் நடுவில் வாழும் மனிதர்களைப் பற்றிய பல கதைகளை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். மேலும், அவர்களின் அனுபவம், உயிர் பிழைத்த தருணம் போன்ற பலவற்றை விரிவாக பகிர்ந்து கொள்வதுண்டு. அந்த வகையில், கொலம்பிய நாட்டில் பிறந்த பிரிட்டிஷ் பெண் மெரினா சாப்மேனுக்கும் இப்படியொரு அனுபவம் தான் கிடைத்துள்ளது.

குரங்குகள் கூட்டத்தால் வளர்க்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். அந்தப் பெண் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை சிமியன் வகை விலங்குகள் மற்றும் பிற விலங்குகளுடன் காட்டில் கழித்ததாகக் கூறியுள்ளார். சாப்மேனின் கூற்றுப்படி, அவர் தனது கிராமத்திலிருந்து கடத்தப்பட்டபோது அவருக்கு சுமார் 5 வயதுதான் ஆகியிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீட்கப்படும் வரை கப்புச்சின் வகை குரங்குகள் என்று அழைக்கப்படும் ப்ரைமேட் இனத்துடன் தான் அவர் காட்டில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காட்டு விலங்குகளுடன் பழகுவதற்காக குரங்குகளுடன் எப்படி வாழ வேண்டும் என்பதையும், அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதையும் சாப்மேன் பகிர்ந்து கொண்டார். அவர் கடத்தப்பட்டதைப் பற்றி பேசும்போது, ​​அவருடைய வீட்டிலிருந்து அவரை விரட்டிய இரண்டு ஆண்கள் சாப்மேனை அழைத்துச் சென்றது குறித்து அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாப்மேன், தனது சொந்தக் குடும்பத்துடன் வாழ்வது குறித்த எந்த நினைவும் தனக்கு இல்லை என்றும், தெருக்களில் உயிர் பிழைத்ததை தெளிவில்லாமல் நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார். அவர் ஒரு காட்டில் தனியாக விடப்பட்டதாக சாப்மேன் கூறியுள்ளார்.

இது குறித்த கேட்டபோது, “நான் அவர்களின் கால்களைப் பார்த்தேன், ஒன்று கருப்பு மற்றும் ஒரு வெள்ளை மனிதன் ஷார்ட்ஸில் இருந்தனர். என்னை அங்கே விட்டுவிடாமல், எனக்காகத் திரும்பி வரும்படி அவர்களிடம் கெஞ்சினேன்" என்று சாப்மேன் வலியுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அங்கு ஒரு குரங்கு தன்னை குத்தியது என்றும் கூறினார். காட்டில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் அவர் ஒரு பெண்ணால் தத்தெடுக்கப்பட்டார். விலங்கினங்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியை நிறுவ அவருக்கு சிறிது காலம் எடுத்து கொண்டதாக சாப்மேன் குறிப்பிட்டார், ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு, சாப்மேனை குரங்கு கூட்டம் "ஏற்றுக் கொண்டனர்" என்றும் குறிப்பிட்டார்.

Also Read : குளிர்காலத்தில் செல்லப் பிராணிகளை தாக்கும் 5 நோய்கள்..!

சில அறிக்கைகள் சாப்மேன் அண்டை வீட்டாரால் காப்பாற்றப்பட்டதாகவும், அதன் பிறகு அவர் 14 வயதில் ஒரு பெண்ணால் தத்தெடுக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இப்போது, சாப்மனுக்கு ஒரு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தனது மகள் வனேசாவின் சில உதவியுடன் "தி கேர்ள் வித் நோ நேம்" என்கிற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார், மேலும் அவரது குழந்தைப் பருவத்தில் குரங்குகளுடன் வாழ்ந்த அனுபவத்தைப் படம்பிடித்த நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்த ஆவணப்படத்தின் தலைப்பு "குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்" ("Woman Raised By Monkeys") என்பதாகும்.

First published:

Tags: Animals, Monkey, Wild Animal