பொதுவாக தன்னை போன்றே மற்றவர்களையும் நேசிப்பது மிகவும் அழகிய விஷயம். இந்த குணம் எல்லோருக்கும் இருக்காது என்றாலும், ஒரு சிலர் தன்னை போன்றே பிறரையும் நேசிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்ற மனிதர்கள் மீதும், பிற ஜீவ ராசிகள் மீதும் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பிறர் கஷ்டப்படும் போது, அதை கொஞ்சமும் பொறுத்து கொள்ள மாட்டார்கள். உடனே அவர்களுக்கு உதவ வேண்டும் என்று துடிப்பார்கள். இப்படிப்பட்ட பெண்மணி, ஒரு வாத்துக்கு செய்த உதவி தான் தற்போது வைரலாகி உள்ளது.
வாய்மொழியாக உதவி கேட்க முடியாத பிற மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ சிறிய அளவு கருணை காட்டும் மனிதர்கள் அற்புதமானவர்கள் என்று சொல்லலாம். இந்த பெண்மணியும் அப்படிப்பட்டவராகவே உள்ளார். மதர் தி மவுண்டன் ஃபார்ம் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு அழகான வாத்து பற்றிய வீடியோவை பதிவிடப்பட்டுள்ளது. இந்த அழகிய வீடியோவை பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் முகத்தில் புன்னகை பூக்கும், அதே போன்று உங்கள் நாட்களையும் இது மிகவும் பிரகாசமாக்கும்.
இந்த வீடியோவில் பீ (bee) என்கிற அழகான குட்டி வாத்தை ஒரு பெண் கையில் வைத்தபடி உள்ளார். அதில் அந்த வாத்து பற்றி அறிமுகம் செய்கிறார். "இந்த வாத்து பெயர் பீ. இந்த வாத்து ஒரு குறிப்பிட்ட இறகு நிலையைக் கொண்டிருப்பதால், அது தன்னை உலர்வாக வைத்து கொள்ள கடினப்படுகிறது. அதனால், நான் இந்த வாத்திற்கு ஒரு ரெயின்கோட் செய்துள்ளேன்” என்று அப்பெண் கூறுகிறார். இந்த வீடியோவில் செலுத்தப்படும் அன்பும் கருணையும் எல்லையற்றது. இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் தன்னை சுற்றி அன்பான மனிதர்கள் இருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்? என்கிற நேர்மறையான உணர்வை தருகிறது.
View this post on Instagram
மே 15 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை சுமார் 4.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த பெண்ணை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், "உங்கள் காலத்தை அழகாக மாற்ற முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது." என்று குறிப்பிட்டு எழுதி உள்ளார். மேலும் ஒருவர், "மிகவும் நேர்மறையான வீடியோ" என்று கருத்து கூறியுள்ளார். மூன்றாவதாக ஒருவர், "இந்த வீடியோ என் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது" என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
Also Read : ஆலியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை!
இது போன்ற ஒரு சிறப்பான வீடியோவை பார்த்ததில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மனித நேயம் என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும், நாம் எல்லா உயிரினங்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்பதையும் இந்த வீடியோ மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எல்லோரிடமும் அன்புடனும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு நன்கு உணர்த்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video