• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன் - தென்னாப்பிரிக்கா ஆடை வடிவமைப்பாளர்!

KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன் - தென்னாப்பிரிக்கா ஆடை வடிவமைப்பாளர்!

KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன்

KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன்

KFC என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்காத முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு ஃபேஷன் டிசைனர்.

  • Share this:
சுற்றுசூழல் பாதுகாப்புக்கு பல பொருட்களை, குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளர், வித்தியாசமான பொருள் ஒன்றை ரீசைக்கிள் செய்து ஆடைகளை வடிவமைத்து வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அவர் எந்த பொருளை மறுசுழற்சி செய்தார் தெரியுமா?

உலகம் முழுவதும் கிளைகள் பரவியுள்ள, கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட உணவு நிறுவனமான KFC இன் உணவு பேக்குகளைப் பயன்படுத்தி, அழகான ஆடைகளை வடிவமைத்துள்ளார் தென்னாப்பிரிக்கா ஃபேஷன் டிசைனர்.

KFC, கென்ட்டகி ஃபிரைடு சிக்கனுக்கு ஃபிரைடு சிக்கனுக்கு அடிமையானவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். KFC என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்காத முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு ஃபேஷன் டிசைனர்.

நோகு ஜோதா என்ற தென்னாப்பிரிக்கா ஆடை வடிவமைப்பாளர் தனக்கு KFC உணவுகள் மீது அலாதியான பிரியம் என்றும், அதனை வெளிப்படுத்த, KFC பேக்குகளைப் பயன்படுத்தி ஆடைகளை வடிவமைக்க முடிவு செய்தேன் என்று தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

KFC பேக்குகளை மறுசுழற்சி செய்து உருவாக்கிய அழகான ஒரு ஸ்கர்ட் மற்றும் டியூப் டாப் ஆடையில், தன்னுடைய புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கையில் KFC கப் ஒன்று வைத்துக்கொண்டு, சிரித்த படி போஸ் கொடுத்துள்ளார் ஆடை வடிவமைப்பாளர். #KFCsuperfan என்ற ஹாஷ்கில் KFC இன் சூப்பர் ஃபேன் என்பதைத் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.



சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள் டிவிட்டர் முழுவதும் வைரலாகி, KFC நிறுவனத்தை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இவரின் பதிவுக்கு 13000 க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. இவருடைய பதிவு வைரலாக பரவியதற்கான முக்கிய காரணம், இவர் KFC பேக்குகள் மறுசுழற்சி செய்த ஆடை அணிந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் கணக்கில் பின் செய்து வைத்தது.

பின்னர், தென்னாப்பிரிக்காவின் KFC கிளையும், ஆடை வடிவமைப்பாளரின் ஆச்சரியமூட்டும் செயலைப் பார்த்து வாயடைத்துப் போனதாக தெரிவித்திருந்தது. “நாங்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” என்று மகிழ்ச்சியாக அவருக்கு பதில் டிவீட் செய்திருந்தது.



KFC தென்னாப்பிரிக்கா டிவிட்டர் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட பதில், இந்த பதிவை மேலும் வைரலாக்கியது. ‘நீங்கள் மிகவும் புதுமையா இருக்கு, இந்த ஆடை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு’ என்று ஒருவர் பாராட்டியுள்ளார்.

‘’கிரியேட்டாவாவும் இருக்கு, கியூட்டாவும் இருக்கு’. ‘கண்களுக்கு விருந்தாக இருக்கிறது’, ‘இதை மாதிரி யாரும் செய்ய முடியாது’ என்றும் பல பாராட்டுகள் கமெண்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த உணவை நான் அப்படியே அணிய விரும்புகிறேன் என்று பலரும் தனக்குப் பிடித்தமான உணவைப் பற்றிக் கூறுவார்கள். அதை கிட்டத்தட்ட இந்த ஆடை வடிவமைப்பாளர் செய்து காட்டியுள்ளார். நெட்டிசன்களிடம் இருந்து இந்த கிரியேட்டிவான ஆடை வடிவமைப்பாளருக்கு பல்வேறு பாராட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: