• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மளிகை மற்றும் உணவு பொருட்களை வாங்க இவ்வளவு நீண்ட பயணமா? வைரலாகும் ஒரு பெண்ணின் கதை!

மளிகை மற்றும் உணவு பொருட்களை வாங்க இவ்வளவு நீண்ட பயணமா? வைரலாகும் ஒரு பெண்ணின் கதை!

சினேட் மீடர்

சினேட் மீடர்

இவரது இந்த நீண்ட பயணத்தை இன்னும் சவாலாக ஆக்குவது என்னவென்றால் சில பகுதிகளில் பயணிக்கும் போது தொலைபேசி சேவை கிடைக்காது என்பதே.

  • Share this:
நமக்கெல்லாம் அருகிலிருக்கும் மளிகை கடைக்கு சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரவே சிலோ சமயங்களில் அலுப்பாக இருக்கும். 5 அல்லது 10 நிமிடங்கள் நடை தூரத்தில் இருக்கும் கடைக்கு கூட பெரும்பாலும் டூ வீலரில் செல்வோம். ஆனால் மளிகை சாமான்களை வாங்க வெளியூருக்கு செல்வதை போல ஒரு ட்ரிப் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் என்ன செய்வோம். இது கற்பனை அல்ல, நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவமே.,

வடமேற்கு கனடாவின் (northwest Canada) ஒரு பிரதேசம் தான் யூகோன் (Yukon). காடு,மலை, க்ளுவான் தேசிய பூங்கா மற்றும் ரிசர்வ் கனடாவின் மிக உயரமான சிகரமான லோகன் மவுண்ட் மற்றும் பனிப்பாறைகள், பாதைகள் மற்றும் அல்செக் நதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பிரதேசத்தில் குறைந்த மக்களே வசித்து வருகின்றனர்.

இங்கு வசித்து வருபவர் பிரபல பெண் டிக்டாக்கரான சினேட் மீடர் (Sinead Meader). இவர் ஒரு நியூட்ரிஷியன் கோச் ஆவார். கனடாவின் தொலைதூர நகரமான யூகோனில் வசிக்கும் இவர், தனது மளிகைப் பொருட்களை வாங்க ஆபத்தான மற்றும் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். ஏனென்றால் மிகவும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் யூகோனில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டும் இல்லை. எனவே அருகிலிருக்கும் டவுனுக்கு சென்று அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தனக்கு தேவையான மளிகை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்கிறார். அவருக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா.? 544 கிமீ தொலைவில்..

ஆம், எனவே சினேட் மீடர் ஒவ்வொரு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒரு முறை (அருகிலிருக்கும்) சூப்பர் மார்கெட்டிற்கு செல்கிறார். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீடர், வழக்கமான மளிகை பொருட்களைப் வாங்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் நீண்ட மற்றும் ஆபத்தான 2 நாள் பயணத்தை ஆவணப்படுத்தினார். இந்த வீடியோ நெட்டிசன்களை பிரமிப்பில் ஆழ்த்தி தற்போது வைரலாகியுள்ளது.

இவரது இந்த நீண்ட பயணத்தை இன்னும் சவாலாக ஆக்குவது என்னவென்றால் சில பகுதிகளில் பயணிக்கும் போது தொலைபேசி சேவை கிடைக்காது என்பதே. தனது சொந்த காரை இந்த பயணத்திற்கு பயன்படுத்தினாலும் போய்வர மொத்தம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் ஆகும் என்ற நிலையில் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் இந்த பயணம் கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறி இருக்கிறார். எரிபொருள் செலவும், சூழலை பொறுத்து இரவில் ஹோட்டல் ரூமில் தங்க நேரிடுவதாலும் ஆயிரக்கணக்கான டாலர் செலவிட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் சினேட் மீடர்.அருகிலுள்ள நகரத்திலிருந்து 544 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் சினேட் மீடர் மளிகை பொருட்களை வாங்க பயணத்திலேயே மொத்தம் 10 மணிநேரங்களுக்கு மேல் செலவழிக்கிறார். இந்த லாங் டிரைவ் சோர்வை ஏற்படுத்தும் என்றாலும் வழியில் தெரியும் மலை மற்றும் இயற்கை காட்சிகளை பார்த்து உற்சாகம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Also read... ரிக்ஷகாரருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்த ஒடிசா பெண்மணி - காரணம் என்ன தெரியுமா?

இரவு தங்க நேரிடுவது பற்றி கூறும் அவர் திடீரென ஏற்படும் பனிப்புயலில் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. ஏனென்றால் உதவிக்கு அழைக்க செல் சர்வீஸ் பெரும்பாலும் இருக்காது. எனவே பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சிட்டியில் தங்கி சாப்பட்டிற்கும் அதிக செலவு செய்ய வேண்டியிருப்பதாக கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: