ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கணவனுக்காக சவப்பெட்டி வாங்கி வைத்திருந்த பெண் - இறுதியில் அவர் செய்த ஆச்சரிய செயல்

கணவனுக்காக சவப்பெட்டி வாங்கி வைத்திருந்த பெண் - இறுதியில் அவர் செய்த ஆச்சரிய செயல்

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால், பெண் ஒருவர் சவப்பெட்டியை ஃபேஸ்புக்கில் விற்பனைக்கு பட்டியலிட்டது தான். இதில், அந்தப் பெண் கூறிய காரணம் தான் அதைவிட ஆச்சரியமானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இன்றைக்கு ஆன்லைன் மார்க்கெட் தளம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. உதாரணத்திற்கு ஓ.எல்.எக்ஸ்., ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ் போன்ற தளங்களில் நாம் பயன்படுத்திய பொருட்கள், புத்தம் புதிய பொருட்கள் போன்றவற்றை நாம் விற்பனைக்கு விளம்பரப்படுத்த முடியும்.

  அது வாகனமாக இருந்தாலும், ஏசி என்றாலும், சாதாரண சேர் என்றாலும் ஆன்லைன் தளங்களில் அவற்றை விற்பனைக்கு பட்டியலிட முடியும். அதே சமயம், பொருட்கள் தேவைப்படும் நபர்கள், அந்த விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்வார்கள்.

  கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்

  நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த ஆன்லைன் தளங்களில் அவ்வபோது நூதனமான விளம்பரங்கள் வருவது உண்டு. குறிப்பாக, முன்பொரு முறை தனது கணவர் விற்பனைக்கு என்று பெண் ஒருவர் வெளியிட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

  அதேபோல, விற்பனை பட்டியலில் வரும் சில பொருட்களை பார்த்தால், இதையெல்லாம் விற்பனைக்கு கொண்டு வருவார்களா என்ற கேள்வி நம் மனதிற்குள் எழும்.

  சவப்பட்டியை விற்பனைக்கு பட்டியலிட்ட பெண்

  தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால், பெண் ஒருவர் சவப்பெட்டியை ஃபேஸ்புக்கில் விற்பனைக்கு பட்டியலிட்டது தான். இதில், அந்தப் பெண் கூறிய காரணம் தான் அதைவிட ஆச்சரியமானது.

  மார்க்கரெட் ஸ்டேபிள்ஸ் என்ற அந்தப் பெண் வெளியிட்ட விளம்பரத்தில், “புத்தம் புதிய சவப்பெட்டியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதை நான் எனது கணவனுக்காக வாங்கினேன். ஆனால், என் நம்பிக்கைக்கு மாறாக, அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால், இப்போதைக்கு இது பயன்படாது. அதே சமயம், வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  அத்துடன், சவப்பெட்டிக்கு பணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

  அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நெட்டிசன்கள்

  இந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஒரு கனம் திகைத்து விடுகின்றனர். இது உண்மையான விளம்பரம் தானா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்த நிலையில், உண்மை தான் என்பதை அந்தப் பெண்ணும் உறுதி செய்துள்ளார்.

  இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த கமெண்டில், நான் இதுவரை பார்த்ததிலேயே இதுதான் மிக வேடிக்கையான பதிவு என்று குறிப்பிட்டுள்ளார். இது மாபெரும் நகைச்சுவையாக தோன்றுகிறது என்ற மற்றொரு பயனாளர் கூறியுள்ளார்.

  Read More: தன் செலவுகளை கவனித்துக் கொள்ள ஆண் நண்பரை நியமித்த இளம்பெண் - இறுதியில் நடந்த ட்வீஸ்ட்

  மற்றொரு நபர் பதிவு செய்துள்ள கமெண்டில், தனிநபராக குடியேறும் நபருக்கு நல்ல மெத்தையாக இது பயன்படக் கூடும் என்று நையாண்டி செய்துள்ளார். இந்த விளம்பரம் பொய்யானது என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தவர்களிடம் வருத்தம் கோருவதாக மார்க்கரெட் ஸ்டேபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Viral, Viral News