Home /News /trend /

சாப்பிட்டதால் சாதனை படைத்த பிரிட்டன் பெண் - வைரல் வீடியோ!

சாப்பிட்டதால் சாதனை படைத்த பிரிட்டன் பெண் - வைரல் வீடியோ!

world record

world record

ate chicken nuggets to set world record | இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், எத்தனை பேர் எப்படியெல்லாம் விதவிதமாக சாதனை படைத்துள்ளார்கள் எனத் தெரியும். அதில் பெரும்பாலானவை சாப்பாட்டு சம்பந்தமான சாதனைகளாக தான் இருக்கும். ‘ஆமாங்க... சாப்பாடு அதுதானே எல்லாம்’, அதில் சாதனை புரிந்தால் தப்பு என்னவென நீங்கள் நினைப்பது எங்களுக்கும் புரிகிறது.

    சாப்பாடு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உயிர் வாழ்வதற்காக சாப்பிட வேண்டும் என்பதை தாண்டி இப்போதெல்லாம் ருசியாக சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இன்னும் சில ஆண்டுகள் வாழ ஆசைப்படுகின்றனர். அப்படி விதவிதமான உணவு வகைகள் ருசி பார்க்க காத்துக்கிடக்கின்றன.

    அதனால் தான் பலரும் சாப்பாட்டை வைத்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் அதில் பல கஷ்டமான சாப்பாட்டு போட்டிகளில் கடுமையாக முயன்று வென்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நிமிடத்தில் 352 கிராம் சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    பிரிட்டனைச் சேர்ந்த லே ஷட்கீவர் மூன்று நிமிடத்தில் 775.7 கிராம் சிக்கன் நக்கெட்டை சாப்பிட்டுள்ளார். இதில் ஒரே நிமிடத்தில் 352 கிராம் சிக்கன் நக்கெட்ஸை சாப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக படைக்கப்பட்ட சாதனையை முறியடிக்கும் வகையில் 54 கிராம் அதிக எடை கொண்ட நக்கெட்களை சாப்பிட்டுள்ளார்.

    ஆத்தி எத்தா தண்டி.. ராஜ நாகம் மற்றொரு பாம்பை சாப்பிடும் அரிய வீடியோ!


    கின்னஸ் உலக சாதனைகளில் மிகவும் விரும்பப்படும் மற்றும் தற்போது பரபரப்பாக பேசப்படும் தலைப்பாக அதிக சிக்கன் நக்கெட்ஸை சாப்பிட்டது உள்ளது. நியூசிலந்தை சேர்ந்த உணவு பிரியை நெலா சிஸ்ஸெர் (Nela Cisser)ஒரு நிமிடத்தில் 298 கிராம் சாப்பிட்டதே சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் அந்த சாதனையை இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான "லோ ஷோ டெய் ரெக்கார்ட்" படப்பிடிப்பில் மேடைக்கு பின்னால் லே ஷட்கீவர் முறியடித்துள்ளார்.

    உணவு பிரியை ஆன இவர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். 2019ம் ஆண்டு பழங்கள் மற்றும் உலர் பழங்களால் செய்யப்பட்ட மூன்று மின்ஸ் பைகளை 52.21 நொடிகளில் சாப்பிட்டு சாதனை படைத்தார். 7.80 நொடிகளில் மூன்று முட்டை உறுகாய்களை சாப்பிட்டது, 21.95 நொடிகளில் கையால் தொடாமலேயே ஒரு மஃபினை உட்கொண்டது என அந்த ஓராண்டில் மட்டும் 3 சாதனைகளை தொடர்ந்து படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு கைகளின் உதவி இன்றி 20 மார்ஷ்மல்லோக்களை சாப்பிடுவது, ஒரு நிமிடத்தில் எட்டு தக்காளிகளை சாப்பிட்டுவது என சாதனை படைத்திருக்கிறார்.

    https://www.instagram.com/p/CbuXtHlD5ZE/

    தற்போது இவரது சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிடும் வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral Video, World record

    அடுத்த செய்தி