முன்னாள் காதலன் கண்ணீர் சிந்த ஆயிரம் கிலோ வெங்காயம் அனுப்பிய காதலி... ஆனால் நடந்ததோ வேறு...!

”பல அங்காடிகள் ஏறி, இறங்கி 1000 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி முன்னாள் காதலனுக்கு பரிசாக அனுப்பி உள்ளார் பெண் ஒருவர்”

முன்னாள் காதலன் கண்ணீர் சிந்த ஆயிரம் கிலோ வெங்காயம் அனுப்பிய காதலி... ஆனால் நடந்ததோ வேறு...!
  • Share this:
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுக்கு ஆயிரம் கிலோ வெங்காயம் பரிசாக அனுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

காதல் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை காதலனும் அனுபவிக்க வேண்டுமென்று சீனாவை சேர்ந்த் பெண் ஒருவர் வித்தியாசமான முடிவை கையில் எடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் முடிவை காதலன் வேறு வழியில் கையாண்டு தனக்கு சாதகமாக்கி உள்ளார்.

சீனாவின் ஷான்டாங் மாகணத்தை சேர்ந்தவர் ஜாவோ. இவர் ஜனியாங் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்துவிட்டனர். இதன்பின் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை.


சீனாவில் கடைப்பிடிக்கப்படும் காதலர் தினத்தன்று ஜாவோ தனது  முன்னாள் காதலனுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை அனுப்பி உள்ளார். பல அங்காடிகள் ஏறி, இறங்கி 1000 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி  பரிசாக அனுப்பி உள்ளார். இப்படியொரு பரிசு தனக்கு கிடைக்கும் என்று ஜனியாங் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதனுடன் ஜானியாங்கிற்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளார் ஜாவோ. அதில் “நான் கடந்த பல நாட்களாக கண்ணீர் வடித்து வருகிறேன். தற்போது இந்த வெங்காயத்தால் நீயும் சிறிது கண்ணீர் விடு“ என்றுள்ளார்.

இது குறித்து ஜானியாங் அளித்து பதில் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. “அவள் அழுவது பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. நானும் அழப்போவதும் இல்லை. தற்போது எனக்கு இருக்கும் ஒரே சிந்தனை இந்த வெங்காய மூட்டைகளை எப்படி விற்று காசு சம்பாதிக்கலாம் என்பது தான்“ என்றுள்ளார்.இந்த பதிலை கேட்டால் ஜாவோ மேலும் கண்ணீர் சிந்துவார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading