• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கையில் சிப்.. தானாக திறக்கும் வீட்டு கதவு.. இண்டர்நெட் அதிசயங்கள் - வைரல் வீடியோ

கையில் சிப்.. தானாக திறக்கும் வீட்டு கதவு.. இண்டர்நெட் அதிசயங்கள் - வைரல் வீடியோ

Viral video

Viral video

கையில் உள்ள சிப் ஒன்றின் மூலம் தான் கதவை திறக்க முடிவதாக கூறப்படுகிறது.

  • Share this:
பெண்மணி ஒருவர் சாவி இல்லாமல் வீட்டின் கதவுகளை திறக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போதைய நவீன தொழில்நுட்பத்தினால் எந்தவொரு செயலும் சாத்தியம் என்ற வகையில் உலகம் முழுவதும் பல்வேறு கண்டிபிடிப்புகள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ முதல் நவீன ஆயுதங்கள் வரை எல்லா துறையும் முன்னேறிக்கொண்டு வருகிறது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் எதுவும் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. இந்த நிலையில் பெண் ஒருவர் தன் வீட்டின் கதவுகளை சாவி இன்றி திறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அவரது கையில் உள்ள சிப் ஒன்றின் மூலம் தான் கதவை திறக்க முடிவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கிய ‘சிப் கேர்ள்’ என அழைக்கப்படும் அந்த பெண், ஜூன் 25, 2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது கையில் என் கணவர் கூறியபடி, ஆர்எஃப்ஐடி (RFID) என்ற சிப் பொருத்தப்பட்டது.
நான் வேண்டாம் என்று கூறினேன், என்னுடய கணவர் கேட்கவில்லை. என்னை சமாதானம் செய்து, அந்த சிப்பை என் கையில் பொருத்தினார்கள்.

Also Read:  ஆன்லைன் கல்வியில் 522 மணி நேரங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இதனால் தற்போது எங்களது வீட்டை சாவி இல்லாமலே என்னால் திறக்க முடிகிறது. எப்படி சாவி இல்லாமல் திறக்கிறேன் என்று பாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். அந்த வீடியோவில், தன்னுடைய வீட்டிற்கு செல்லும் அந்த பெண், வீட்டின் வாசலின் அருகே செல்கிறார். அவரது வீடு முழுவதும் சென்சார்களால் இணைக்கப்பட்டது ஆகும். வீட்டின் வாசலில் உள்ள சென்சார் கருவியின் பக்கத்தில் சிப் பொருத்தப்பட்ட கையினை கொண்டு செல்கிறார்.

உடனே, கதவானது திறக்கிறது. பிறகு வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள ஒரு கப்போர்டை தன் கையில் உள்ள சிப்பின் மூலம் திறக்கிறார். பின்னர் இதுகுறித்து பேசும் அவர்,‘ எங்கள் வீடு முழுவதும் மின்சார சென்சார்களால் இணைப்பட்டிருக்கிறது. வீட்டினை திறக்க சாவி எதுவும் தேவையில்லை. என்னால் மின்சார சிப்பினை உபயோகிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று என் கையிலேயே சிப்பினை வைத்துவிட்டார் என் கணவர்’ என்று அந்த வீடியோவில் கூறுகிறார்.

Also Read: ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!

இந்த வீடியோவை அவர் டிக்டாக்கில் பகிர, 10 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இவர் ஷேர் செய்த மற்றொரு வீடியோவில், ‘ சிறிய அரிசி போன்ற கருவி என்னுடைய கைகளில் பொருத்தப்பட்டிருந்தது. இதனை என்னவென்று சொல்லுவேன் என்று எனக்கு தெரியவில்லை’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இது போன்ற தொழில்நுட்பங்களில் அந்த சிப்பின் செயல்பாட்டை மற்றொருவர் திருட்டுத்தனமாக இயக்கினால் அவர் எங்கு இருக்கிறார் , எங்கு செல்கிறார் போன்றவைகளை கண்காணிக்க முடியும். எனவே தொழில்நுட்ப்பம் எந்த அளவுக்கு வளர்ந்து இருந்தாலும், தனி மனிதன் ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சிறந்ததாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: