கொரோனா உறுதியானதால் ஷாப்பிங் மாலில் கதறி அழும் இளம்பெண் - மனதை உருகவைக்கும் வீடியோ..

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பெண் ஒருவர் ஷாப்பிங் மாலில் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா உறுதியானதால் ஷாப்பிங் மாலில் கதறி அழும் இளம்பெண் - மனதை உருகவைக்கும் வீடியோ..
வீடியோ காட்சி
  • Share this:
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்ப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கொரோனாவின் பிறப்பிடமான ஊஹானில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை உருவெடுத்தது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் சீனாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சீனாவின் பீஜிங்கின் வணிக வளாகம் ஒன்றில் பெண் ஒருவருக்கு மொபைல் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர். இதை கேட்ட அந்த பெண் அந்த இடத்திலேயே கதறி கதறி அழுகிறார். அந்த பெண்ணின் அருகே இருப்பவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அந்த பெண்ணிடமிருந்து விலகி செல்கின்றனர்.


இந்த வீடியோ இணையத்தில் பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்துள்ளது. அந்த பெண் கதறி கதறி அழும் காட்சிகள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பின் சோகத்தில் இருக்கும் அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்தை கடந்துள்ளது. கொரேனாவிற்கு தடுப்பு ஊசி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading