Home /News /trend /

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்..கண் இமைக்கும் நேரத்தில் ரயில்வே ஊழியர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்..கண் இமைக்கும் நேரத்தில் ரயில்வே ஊழியர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | ஏஎன்ஐ தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேவேளையில், ரயில்வே தண்டவாளத்தை கடந்த பெண்மணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
இந்தியாவில் சாலை விபத்துக்களைப் போலவே ரயில் பயணிகளின் அலட்சியம் காரணமாகவும் பல்வேறு விபத்துக்கள் அரங்கேறுகின்றன. ரயில்வே கேட்டைக் கடந்து செல்வது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, செல்ஃபி எடுப்பதற்காக ஓடும் ரயில் முன்பு நிற்பது, ரயில் கூரை மீது ஏறி சாகசங்கள் செய்வது, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வது என மக்களின் பொறுப்பற்ற செயலால் ஏராளமான விபத்துக்கள் அரங்கேறுகின்றன. இதுதொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே துறையே இதுபோன்ற வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. சில நிமிடங்களை சேமிப்பதற்காக அவசரப்பட்டு எடுக்கும் முடிவால், விலை மதிப்பற்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளத்தில் பெண் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து செய்த செயல் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷிகோஹாபாத் ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபடாமல் தப்பிக்கும் காட்சிகள் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருக்கும் பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து வந்து நடைமேடை மீது ஏற முயற்சிக்கிறார். ஆனால் அவரால் ஏற முடியாவில்லை. அந்த சமயம் பார்த்து மறுபுறம் ரயில் ஒன்று வேகமாக பாய்ந்து வருகிறது.

Read More : பெண்ணின் காதில் புகுந்த பாம்பு... வெளியே எடுக்க போராடும் மருத்துவர் - ஷாக் வீடியோ


அதனைப் பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் வேகமாக ஓடிவந்து நடைமேடை மீது ஏற முடியாமல் திண்டாடி வந்த பெண்ணை கை கொடுத்து மேலே தூக்குகிறார். திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல், அந்த பெண் மேலே ஏறிய அடுத்த நொடியே ரயில் வேகமாக அவரை கடந்து செல்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) கான்ஸ்டபிள் ஷிவ்லால் மீனா மற்றும் ஒரு ரயில்வே ஊழியர் அந்த பெண்மணி தண்டவாளத்தைக் கடப்பதை பார்த்து விரைந்து வந்துள்ளனர். அதில் ரயில்வே ஊழியர் விரைந்து வந்து அப்பெண்மணியை மீட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

https://twitter.com/ANINewsUP/status/1568257279820201984

ஏஎன்ஐ தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சரியான சமயத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வரும் அதேவேளையில், ரயில்வே தண்டவாளத்தை கடந்த பெண்மணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். அதற்கு காரணம் தனது உயிரைப் பயணம் வைத்து நடைமேடை மீது ஏற்றி விட்ட ரயில்வே ஊழியருக்கு நன்றி கூட சொல்லாமல், அந்த பெண்மணி தனது வாட்டர் பாட்டிலை எடுப்பதற்காக மஞ்சள் கோட்டைத் தாண்டி மீண்டும் ரயில் அருகே செல்கிறார். அவர் செய்த பொறுப்பற்ற செயலால் மீண்டும் ஒருமுறை தனது உயிரை பணயம் வைத்தது நெட்டிசன்களை கோபமடைய வைத்துள்ளது.

எனவே ட்விட்டர் யூஸர்கள் அந்த பெண்மணியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் ஒருவர் ,“இப்படிப்பட்ட தருணத்தில் கூட தனது மில்லியன் டாலர் மதிப்புள்ள வாட்டர் பாட்டிலைக் காப்பற்றுகிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி