மதுபானத்தில் தவறான மிக்ஸிங் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபநிலை..

படம்

இங்கிலாந்தில் நைட் கிளப்புக்கு சென்ற பெண்ணுக்கு மதுபானத்தில் தவறான மிக்சிஸிங் கலக்கப்பட்டதால், சில மணி நேரம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

  • Share this:
உலகம் முழுவதும் பல்வேறு வகை மதுப்பிரியர்கள் இருக்கிறார்கள். தாங்கள் குடிப்பதே வெளியுலகுக்கு காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் முதல் அட்ராசிட்டி செய்பவர்கள் வரை பல ரகங்களில் இருக்கின்றனர். அவர்கள் யாராக இருந்தாலும் மதுவை மட்டும் அப்படியே குடிக்காமல் அவற்றுடன் ஏதாவது ஒன்றை மிக்சிஸிங் செய்து கொள்வார்கள். சோடா, தண்ணீர் கலந்து குடிப்பவர்களும் இருக்கிறார்கள், பழரசம் மற்றும் பச்சை காய்கறிகள், வெங்காயம் கடித்துக் கொண்டு குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், சரியான மிக்சிங் இல்லாமல், ஒத்துவராத மிக்சிங்கை கலந்து குடித்தால் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியான ஒரு அசாதாரண அனுபவத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எதிர்கொண்டுள்ளார். இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த மில்லி, அண்மையில் நைட் கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வோட்காவுடன், லெமனேட்டை கலந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு, தாடைகள் கோணலாகி, கை, கால்களை இழுத்துக்கொண்டது. நொடிப்பொழுதில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மில்லிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

Also Read : ஸ்மார்ட்போன் விற்பனையில் ’சியோமி’முதலிடம் - சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் சரிவு.. என்ன காரணம் தெரியுமா?

மில்லிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து பேசிய அவரது தாயார் கிளாரி டாப்லின், தனது மகளுக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால் மிகவும் அச்சமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையில் அவளை முன்பின் பார்த்ததில்லை எனக் கூறிய அவர், மருத்துவர்களின் சிகிச்சையால் மல்லி இயல்பு நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எதனால் மில்லிக்கு பக்கவாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கு விளக்கம் அளித்துள்ள மில்லியின் தாயார் கிளாரி, நைட் கிளப்பில் அவளுக்கு 2 விதமான போதை மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று பக்கவாத பாதிப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இயல்பு நிலைக்கு திரும்பிய மில்லி பேசும்போது, "சௌத்தென்ட் பகுதியில் இருக்கும் Moo Moo நைட் கிளப்புக்கும் நண்பர்களுடன் சென்றேன்.

Also Read : நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் ஃப்ரீயா பாக்கணுமா ? அப்ப இந்த ஜியோ பிளான் ரீசார்ஜ் பண்ணுங்க..

இரண்டு, மூன்று முறை மட்டுமே வோட்காவை உறிஞ்சுவிட்டு புகைப்பிடிக்கும் பகுதிக்கு சென்றேன். அப்போது, மிகவும் அதிகமாக குடித்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. திடீரென நிலைகுலைந்துவிட்டேன். என்னுடன் நைட் கிளப்புக்கு வந்த யாரோ ஒருவர் இதனை செய்திருக்கக்கூடும்" என்றார். கிளாரி பேசும்போது, என் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டாள் என மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்த மாதிரியான செயல்கள் மூலம் அவள் நைட் கிளப்புக்கு செல்வதை நிறுத்தமாட்டாள் என்றும் கிளாரி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: