தென்அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு கேஎல்எம் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானம் நெதர்லாந்தை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த டமாரா என்ற பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. தனது அசளகரியத்தை சரி செய்வதற்காக அந்தப் பெண் கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏன் தெரியுமா? தான் கர்ப்பமாக இருப்பதே டமாராவுக்குத் தெரியாதாம். கழிவறைக்குச் சென்ற பெண் சிசுவுடன் வருவதைக்கண்ட பணிப்பெண்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். கழிப்பறையில் இருந்து குழந்தையோடு வந்த பெண்ணுக்கு உடனடியாக தேவைப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள விமானப் பணிப் பெண்கள் அதே விமானத்தில் ஆஸ்திரிாயவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் இருந்துள்ளார்.
அவர் டமாராவுக்கு தேவையான முதல் உதவிகளைச் செய்துள்ளார். விமானம் ஓய்விற்றாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்மடாம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், டமாராவும் அவர் பெற்றெடுத்த சிசுவும் உடனடியாக அருகில் இருக்கும் மருதீதுவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். தாயுக்கும் சேயுக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமானம் கிளம்பும்போது விமானத்தில் இல்லாத புதிய வரவான குழந்தைக்கு மேக்சிமிலியானோ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது, தற்போது புதிதாக விமானத்தில் பிறந்த மேக்சிமிலியானோவிற்கு குடியுரிமை தெடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து டிரக்கில் ஏற்றி சென்ற கும்பல்... தூங்கி எழுந்த காவலாளி அதிர்ச்சி
தாயையும் சேயையும் பரிசாதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இருவருக்கும் தேவையான மருததுவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தான் கர்ப்பமாக இருந்தத தெரியாமல் இருந்த நிலையில், தனக்கு திடீரென குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அருகில் இருந்தவர்களின் உதவியால் தானும் தனது குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாகவும் டமாரா கூறியுள்ளார். பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென குழந்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தாயும் சேயும் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், தங்கள் விமானத்தின் வழியாக புதிதாக உலகத்தை பார்த்த அந்தக் குழந்தைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது கேஎல்எம் விமான நிறுவனம்.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Trending News