Home /News /trend /

முன்னாள் காதலனுக்கு கிஃப்ட்டாக கொடுத்த காஸ்டலி பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்... ஷாக் வீடியோ!

முன்னாள் காதலனுக்கு கிஃப்ட்டாக கொடுத்த காஸ்டலி பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்... ஷாக் வீடியோ!

பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்

பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்

தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்த கனோக் வான் (Kanok Wan) என்ற இளம்பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலரை, பழி வாங்க காதலர் வைத்திருந்த விலை உயர்ந்த பைக்கை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

காதலர்களுக்குள் பிரேக் அப் நடப்பது என்பது உலகளவில் தற்போது சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. உருகி உருகி காதலித்தாலும், ஊர் சுற்றினாலும் சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக கூட காதல் உறவை முறித்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஒரு சில பிரேக் அப்களில் இருவருக்குள்ளும் ஒன்றுமே நடக்காத மாதிரியும், முன்பின் தெரியாதவர்கள் மாதிரியும் இருவரும் கடந்து சென்று விடுவார்கள். ஆனால் ஒரு சில பிரேக் அப்கள் மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ் போடும் அளவிற்கு சென்று விடும். அப்படிப்பட்ட பிரேக்கப் ஒன்று தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நிகழ்ந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்த கனோக் வான் (Kanok Wan) என்ற இளம்பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலரை, பழி வாங்க காதலர் வைத்திருந்த விலை உயர்ந்த பைக்கை தீ வைத்து கொளுத்தி உள்ளார். இது தொடர்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஒரு சிறிய ட்விஸ்ட் என்னவெனில் தீக்கிரையாக்கப்பட்ட விலை உயர்ந்த பைக்கானது கனோக் வானின் முன்னாள் காதலர் காசு கொடுத்து வாங்கியது இல்லை. பிரேக்கப்பிற்கு முன் அவர்கள் ஒன்றாக இருந்த போது தனது காதலருக்கு கனோக் வான் ஆசை ஆசையாக பரிசளித்த பைக் ஆகும். ஆக விலையை பொருட்படுத்தாமல் ஆசை காதலருக்கு தான் பரிசளித்த பைக்கிற்கே தற்போது கனோக் வான் தீ வைத்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் காதலரை பழிவாங்க தாய்லாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி விட்டது. 36 வயதான கனோக் வானின் முன்னாள் காதலர் பள்ளி ஒன்றில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. பள்ளியின் பார்க்கிங் பகுதியில் தனது முன்னாள் காதலை வாங்கி கொடுத்த பைக்கை நிறுத்தி வைத்திருந்துள்ளார் அந்த ஆண். அப்போது அங்கு கேன் ஒன்றில் பெட்ரோல் நிரப்பி எடுத்து வந்த கனோக், முன்னாள் காதலரின் பைக் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். பின்னர் நெருப்பை பற்ற வைத்தார். குபீரென்று பற்றி கொண்ட தீயை எதிர்பார்க்காத கனோக் வான் தீ தன் மீது பரவாமல் இருக்க தெறித்து ஓடுகிறார். இருந்தும் அவர் மீது லேசாக தீ பற்றி இருப்பது சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு முன் முன்னாள் காதலரை சந்தித்து தன்னுடன் திரும்பி வருமாறு கேட்டுள்ளார் கனோக் வான்.ஆனால் அந்த நபர் கனோக் வானின் கோரிக்கையை புறக்கணித்து அவருடன் மீண்டும் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது. இதனால் முன்னாள் காதலன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த கனோக், நான் தேவையில்லை, நான் வாங்கி கொடுத்த பைக் மட்டும் உனக்கு தேவையா என்ற உணர்வில் அவரை பழிவாங்கவே பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த தீ வைப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. என்றாலும் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு சிலரின் பைக்குகள் தீயில் சிக்கி சேதமடைந்தன. Srinakharinwirot University Prasarnmit Demonstration School-க்குள் இருக்கும் பார்க்கிங் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்த கட்டிடம் பள்ளியின் ஆரம்ப நிலை பிரிவுடன் இணைக்கப்பட்டது. தொற்று காரணமாக மாணவர்கள் யாரும் பள்ளியில் இருந்ததால் எந்த ஆபத்தும் நிகழவில்லை என காவல் அதிகாரி மோங்க்குட் தானோம்ஜாய் குறிப்பிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்படுத்தியதால் கட்டிடத்தின் மற்ற பகுதிகளிலும் தீ பரவாமல் தடுக்க முடிந்துள்ளது.

Also read... வேறொரு பெண்ணுடன் காதல் - திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்!

பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பைக்கிற்கு தீ வைத்த பெண், குறிப்பிட்ட பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியரின் முன்னாள் காதலி (கனோக் வான்) என்பது அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து கனோக் வானை கைது செய்து விசாரித்த போது தான், காதலருடன் ஒன்றாக இருந்த போது ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை காதலருக்கு கனோக் வான் பரிசளித்ததும், பிரேக்கப் காரணமாக கோபம் மற்றும் ஆத்திரத்தில் அதே பைக்கை அவர் தீ வைத்து கொளுத்தியதும் தெரிய வந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bike

அடுத்த செய்தி