வெயில் மேலே பட்டால் அவ்வளவு தான் - கேன்சர் வரை கொண்டு செல்லும் அலர்ஜியால் இளம்பெண் அவதி!

கோப்புப் படம்

பகலில் காற்று வாங்கவோ அல்லது வைட்டமின் டி சத்தை உடலுக்கு தரும் பிற்பகல் வெயில் கூட உடலில் பட முடியாமல் வீட்டு பால்கனியில் கூட இவர் நிற்பதில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் 28 வயது இளம்பெண்ணான ஆன்ட்ரியா ஐவோன் மன்ராய். இவர் தனது வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள்ளயே கழித்து வருகிறார். இதற்கு காரணம் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா அல்ல. இவருக்கு சூரியஒளியால் ஏற்படும் வேதனையே காரணமாக உள்ளது. பகலில் காற்று வாங்கவோ அல்லது வைட்டமின் டி சத்தை உடலுக்கு தரும் பிற்பகல் வெயில் கூட உடலில் பட முடியாமல் வீட்டு பால்கனியில் கூட இவர் நிற்பதில்லை.

சுருக்கமாக சொன்னால் சூரிய வெப்பமோ, ஒளியோ தன் மீது பட இவர் விடுவதில்லை. சூரிய ஒளி இவர் மீது பட்டாலே அலர்ஜி ஏற்பட்டு கொடூர அவஸ்தைக்கு உள்ளாகிறார். அலர்ஜி என்றால் சாதாரண அலர்ஜி அல்ல. தோல் புற்றுநோயை உண்டாக கூடிய அளவிற்கான அலர்ஜி அது. குழந்தை பருவத்திலிருந்து தற்போது வரை ஆன்ட்ரியா ஐவோன் ஒரு முறை, இருமுறை அல்ல சுமார் 28 முறை தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்.

மிக சமீபமாக இவருக்கு கடந்த அக்டோபர் 2020-ல் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுவரை தோல் புற்றுநோயை அகற்ற பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு காரணம் ஆன்ட்ரியா சிறு வயதிலேயே ஜெரோடெர்மா பிக்மென்டோசம் (xeroderma pigmentosum) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சரும உணர்திறனை மிகவும் அதிகரிக்கிறது.

இதன் விளைவால் எளிதாக, தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. தங்கு ஏற்பட்டுள்ள கொடுமையான பாதிப்பு குறித்து பேசிய அவர், 23 வயதிலிருந்தே மாதவிடாய் எனக்கு நின்று விட்டது. உடல் மீது வெயில் பட்டாலே யாரோ உடலுக்கு தீ வைத்து விட்டதை போல சருமம் கடுமையாக எரியும். மேலும் எனது தோல் வயதிற்கு ஏற்ப இல்லாமல், வயதானவர்களின் தோல் போல மாறிவிட்டது. இந்த நோய் ஏற்படுத்தி உள்ள பாதிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது என்று வேதனையுடன் கூறி உள்ளார்.

Also read... பயணிகளின் சோர்வு நிலையை அளவிட உதவும் புதிய 'ஹைடெக்' கழிப்பறை: ஜப்பானில் கண்டுபிடிப்பு!

ஜெரோடெர்மா பிக்மென்டோசமின் அறிகுறிகளில் உடல் மீது சூரிய ஒளி பட்டாலே கடுமையான எரிவது போன்ற உணர்வு, வறண்ட சருமம் மற்றும் தோல் நிறமியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். மேலும் இது காது கேளாமை, வலிப்புத்தாக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்டவை ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 37 தான். ஆனால் ஆன்ட்ரியா தனது எதிர்காலம் குறித்து நேர்மறை சிந்தனையுடன் இருக்கிறார் மற்றும் தந்கன உடல் அபாயங்களைக் குறைக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறார். பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாவிட்டாலும், இரவு நேரங்களில் வெளியே சென்று வந்து தன்னை உற்சாகமாக வைத்து கொள்கிறார்.

அதேநேரத்தில் மருத்துவரை சந்திக்க பகல் நேரத்தில் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் சூரிய ஒளி சருமத்தில் படாத வகையில் "கவச உடைகளை"அணிந்து செல்கிறார். அதே போல மேகமூட்டமாக இருந்தாலும், மழை பெய்தாலும நீண்ட சட்டை, தொப்பிகள் மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே செல்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: