உணவக கழிவறையில் ரகசிய கேமரா... நடிகை புகாரால் போலீசார் விசாரணை...!

news18
Updated: November 10, 2019, 3:52 PM IST
உணவக கழிவறையில் ரகசிய கேமரா... நடிகை புகாரால் போலீசார் விசாரணை...!
News18
news18
Updated: November 10, 2019, 3:52 PM IST
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இருந்த உணவக கழிவறையில் ரகசிய கேமரா இருந்ததாக, ட்விட்டரில் பெண் ஒருவர் பதிவிட, நடிகை ரிச்சா சட்டா போலீசுக்கும் தகவல் அளிக்க விசாரணை நடந்து வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள இஞ்சிவாடி பகுதியில் தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்த நிறுவனத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு பெண்கள் கழிவறையின் மேல் சுவற்றில் இருந்த துளையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உணவக நிர்வாகத்திடம் புகாரளித்தும் அவர்கள் இந்த சம்பவத்தை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும், அந்த இளம்பெண் கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து அன்றைய தினமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுட்டார். இந்த பதிவு வைரலாகவே, பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் புனே போலீசாருக்கு டேக் செய்து ட்வீட் செய்தார்.
Loading...பலருக்கும் இந்த தகவல் சென்ற நிலையில் போலீசார் உணவகத்தில் சென்று விசாரணை நடத்தினர். நடந்த சம்பவத்திற்கு உணவக மேலாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். கழிவறைகளை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிப்பதாக அவர் கூற, துப்புரவு ஊழியர்களிடம் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...