Home /News /trend /

டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்... வைரலாகும் வீடியோ!

டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்... வைரலாகும் வீடியோ!

டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்

டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்

டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோ கிளிப் 11 நொடிகள் தான் என்றாலும், திருடனின் வீட்டை உடைக்க முயற்சி செய்வதை அறிந்த அவர் பயந்து போய் இருக்கிறார் என்பது அவரின் முக பாவனையில் இருந்து தெரிகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப் டிக்டாக். இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், டிக்டாக் போலவே வீடியோ ரிக்கார்டு செய்யும் வேறு சில ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டு டிக் டாக் மாதிரியான சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வப்போது பல வகையான டிக்டாக் வீடியோக்கள் நெட்டிசன்களால் வைரலாக பகிரப்படும்.

வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் ஒரு பெண் டிக் டாக் வீடியோவை பதிவு செய்யும்பொது தன் வீட்டிற்குள் நுழைய பார்த்த திருடனை கண்டறிய உதவியிருக்கிறது. வைரலாக பகிரப்படும் ஷார்ட் வீடியோக்களில் டிக்டாக்கின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. ஆனாலும், ஒரு சில வீடியோக்கள் தான் வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு வித்தியாசமாக, வியக்கும்படியாக, நெகிழ்சியூட்டுவதாக இருக்கும். அதே போன்ற ஒரு வீடியோ தான் தற்போது ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது.

தென் கொரியாவில் வசித்து வரும் அலினா வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர் வழக்கம் போல ஒரு டிக்டாக் வீடியோவைப் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த வீடியோவை பதிவு செய்து கொண்டிருக்கும் போதே, அவருடைய வீட்டை உடைத்து ஒரு திருடன் உள்ளே நுழைய முயற்சி செய்வதைக் கண்டறிந்துள்ளார். அலினா வீடியோ எடுத்து அப்லோடு செய்து கொண்டிருக்கும் போதே யாரோ அவருடைய கதவை தட்டிக் கொண்டே இருக்கும் சத்தமும் கதவை உடைக்கும் சத்தமும் கேட்டிருக்கிறது.

டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோ கிளிப் 11 நொடிகள் தான் என்றாலும், திருடனின் வீட்டை உடைக்க முயற்சி செய்வதை அறிந்த அவர் பயந்து போய் இருக்கிறார் என்பது அவரின் முக பாவனையில் இருந்து தெரிகிறது. பெண்கள் எங்கேயும் பயமின்றி நிம்மதியாக வாழ முடியாதா என்று கேப்ஷன் இந்த வீடியோவை அலினா டிக்டாக் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடியோவைப் பகிர்ந்து கமெண்ட்டுகள் தெரிவித்தும் வருகின்றனர். அலினா பகிர்ந்த அச்சுறுத்தக்கூடிய இந்த வீடியோ மற்ற பெண்களையும் தாங்கள் எதிர்கொண்ட இதேபோன்ற தருணங்களை பகிர வைத்துள்ளது.

“இதே போல எனக்கும் நடந்துள்ளது. நான் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர் என்னுடைய அபார்ட்மென்ட்டுக்குள் வந்துவிட்டார். “பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. கதவில் கீபேட் லாக் மற்றும் உங்கள் ஃபிங்கர் ஃபிரின்ட் இருந்தால் தான் திறக்க முடியும் என்ற அமைப்பைப் பொறுத்திக் கொள்ளுங்கள். போலீசைக் கூப்பிடுங்கள்” என்று ஒரு பெண் கமென்ட் செய்துள்ளார்.



“யாரது, நான் போலீசுக்கு கால் பண்ணிட்டேன்” என்று உங்கள் ஆண் நண்பர்களில் யாரேனும் ஒருவரைக் குரல் பதிவு செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதைப் போன்ற சூழலில் கூடுதல் பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TikTok

அடுத்த செய்தி