யோகா என்பது மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் மலை உச்சி, காடு, ஆற்றின் ஓரம் என பல இடங்களிலும் யோகா செய்து அதனை இன்ஸ்டாவில் பலரும் பதிவு செய்து வருகின்றனர். வித்தியாசமான சூழலில் யோகா என்பதுதான் அதன் தீம். இப்படி செய்யப்படும் யோகா சில நேரங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு. அப்படியான ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் அதிவேகமாக செல்லும் தண்ணீருக்கு மேலே ஒரு மரத்தின் மீது யோகா செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் கால் தடுமாறி அவர் ஓடும் நீருக்குள் விழுந்துவிடுகிறார். ஜிசா என்ற பெண் 2017ல் எடுத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்ப்பதற்கு ஷாக் கொடுக்கும் வீடியோவாக இருந்தாலும் ஜிசாவின் சோகம் இணையத்தில் பலருக்கும் சிரிப்பையே வரவழைத்துள்ளது. இது குறித்து அப்பெண்ணே நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அதில், யோகா காமெடியான விஷயம் இல்லை என்றாலும் என்னுடைய யோகா வீடியோ அமெரிக்காவில் பலருக்கும் சிரிப்பை வரவழைத்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். 5 அடி பள்ளத்தில்தான் விழுந்தேன். ஆனால் 20 அடிக்கும் மேலாக இழுத்துச்செல்லப்பட்டேன். ஒருவழியாக விழுந்து எழுந்து காருக்கு வந்தேன். பலமாக சிரித்த சம்பவம் என்றாலும் இனி பாறை, மரம் என்றால் பயம்தான் எனக்கு என குறிப்பிட்டுள்ளார்.
31 நாட்களாக பூச்சி, புழுக்கள்தான் உணவு... அமேசான் காட்டில் உயிர்தப்பிய நபரின் திகில் அனுபவம்!
ஜிசாவின் பழைய வீடியோ தற்போதும் இண்டர்நெட்டில் ரவுண்ட் அடித்துக்கொண்டே இருக்கிறது. ட்விட்டர் யூசர் ஒருவர் பகிர்ந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துவிட்டது. ஒரு பக்கம் காமெடி என்றாலும் பலரும் சீரியஸான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்து ஏதுமில்லை என்றாலும் இதுமாதிரியான ரிஸ்குகளை இனி எடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர்
Go with the flow 😂 pic.twitter.com/BGZ120HZYL
— Wtf Scene (@wtf_scene) February 24, 2023
நன்றி: ட்விட்டர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yoga