பொதுவாக, யாருக்கேனும் தீவிரமான உடல்நல பாதிப்பு, மற்றும் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்ற சூழ்நிலையில், இணையத்தில் உதவி கேட்பது வழக்கம். அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் யாருமே சொல்லத்துணியாத வகையில் பொய் சொல்லி நன்கொடையாக லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியதும், அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பதும் அம்பலமாகி சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த 44 வயது பெண்மணியான நிக்கோல் எல்கபாஸ் என்பவர், கணவர் இல்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு ஊர் சுற்ற மிகவும் பிடிக்கும் என்பதால், அதற்கான பணத்தை திரட்ட மிகவும் மோசமான வேலையில் இறங்கியுள்ளார்.
அதாவது தனக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதாகவும், ஸ்பெயினில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது சிகிச்சைக்காக நிதி உதவி செய்யும் படியும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இப்படியொரு மோசமான கதையை உருவாக்கி நிக்கோல் போட்ட சோசியல் மீடியா பதிவை உண்மை என நம்பி ஏராளமான மக்கள் உதவ முன்வந்துள்ளனர்.
Also Read : உங்க கண் கூர்மைக்கான சவால்.. ஒளிந்துள்ள கம்பளிப்பூச்சியை 30 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்
முதலில் அவருக்கு உதவிகள் பெரியளவில் குவியவில்லை என்றாலும் கூட சிறுக சிறுக பலரும் அவருக்கு நன்கொடை அளித்துள்ளனர். மொத்தம் அவருக்கு 700 பேர் காசு கொடுத்து உதவி உள்ளனர். இதன் மூலம் 43 லட்சங்கள் வரை அவர் நிதி திரட்டியுள்ளார். பின்னர் அந்த பணத்தை எடுத்துச் சென்று, சுற்றுலா, சூதாட்டம், கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுக்களை வாங்குவது, சொகுசு ஓட்டல்களில் உணவருந்துவது என ஜாலியாக அந்த பணத்தை இஷ்டத்துக்கு செலவு செய்துள்ளார்.
எல்கபாஸ் புற்றுநோய் தொடர்பாக ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்ட புற்றுநோயியல் நிபுணர் அவர் நன்கொடை கேட்கும் சோசியல் மீடியா பதிவுகளை கண்டுபிடித்த போது அதிர்ந்து போயுள்ளார். அவர் மூலமாகவே நிக்கோல் போலியாக வேஷம் போட்டு பணம் வசூலித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை GoFundMe என்ற பக்கத்தில் பதிவிட்டு, தனக்கு கேன்சர் என பொய் சொல்லி நிதி திரட்டியுள்ளார்.
இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து நிக்கோல் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இதையடுத்து பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து போலீசார் உத்தரவிட்டனர். இப்போது தனது தவறுக்காக நிக்கோல் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.