Trending : வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த நரி - சோறுபோட்டு விரட்டிய தம்பதி!

வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த நரி

லண்டனில் வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்திருந்த நரியை, ஒரு தம்பதி சோறு போட்டு விரட்டியுள்ளனர்.

  • Share this:
லண்டனில் வீடு ஒன்றில் நரி ஒன்று திடீரென புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தம்பதி அதனை விரட்டியுள்ளனர். வெளியில் ஓடாமல் வீட்டிற்குள் சென்ற நரி, வாஷிங் மெஷினுக்குள் சென்று ஒளிந்துகொண்டது. தம்பதியும் நீண்ட நேரமாக தேடியுள்ளனர். கடைசியாக வாஷிங்மெஷின் கதவை திறந்துபார்த்தபோது நரி, அதனுள் இருந்துள்ளது. பயத்தில் அலறியவாறு, கூச்சலிட்டு நரியை வெளியே அனுப்ப முயற்சி செய்துள்ளனர். எதற்கும் பிடிகொடுக்காத நரி, வாஷிங்மெஷினுக்குள்ளேயே இருந்துள்ளது.

எப்படி வெளியேற்றுவது என அவர்கள் யோசித்தபோது, உணவு தேடி வீட்டிற்கு வந்திருக்கலாம் என அவர்கள் எண்ணியுள்ளனர். அதன்படி, நரிக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுத்துள்ளனர். அவர்கள் நினைத்தது சரியாக இருந்துள்ளது. உணவைப் பார்த்த நரி, வாஷிங்மெஷினுக்குள் இருந்து வெளியே வந்து அவற்றை சாப்பிட்டுவிட்டு இயல்பாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. தங்களுக்கு நேர்ந்த இந்த வித்தியாசமான அனுபவத்தை, தம்பதியில் ஒருவரான நட்டாஷா பிரயாக் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ | திருமண கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய மணமகள் : போலீசாரிடம் சிக்கிய சோகம்!

நரி வாஷிங்மெஷினுக்குள் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், அன்றைய நாளில் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "நானும் என் கணவர் ஆடமும் வீட்டை பூட்டாமல் வெளியே காரை நோக்கி வந்தோம். அப்போது, லிவ்விங் ஏரியாவில் நரி இருப்பதை பார்த்த என்னுடைய கணவர், நாய் என்று எண்ணி வேகமாக ஓடி துரத்தினார். சிறிது நேரத்தில் நரி என்பதை உணர்ந்த நாங்கள், அதனை வெளியே அனுப்ப விரட்டினோம். திடீரென எங்கள் கண்களில் இருந்து மறைந்த நரியை நீண்ட நேரமாக தேடினோம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டில் எஞ்சியிருந்தது வாஷிங்மெஷின் மட்டுமே. அங்கேயும் தேடுவதற்கு கதவை திறந்தபோது, நரி அதனுள் இருந்தது. கத்தி, கூச்சலிட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்தோம். நரி சிறிதும் அசையவில்லை. உணவு கொடுக்கலாம் என திட்டமிட்டு, அதன் கண்களுக்கு தெரியும்படி உணவுப் பொருட்களை வைத்தோம்.

 

 



 

 



 

 



 

எங்களை திட்டப்படி, வாஷிங்மெஷினுக்குள் இருந்து வந்த நரி உணவை சாப்பிட்டுவிட்டு, எந்தவித பதட்டமும் இல்லாமல் வெளியே சென்றது" எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

மே 25 ஆம் தேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நட்டாஷா பதிவிட்ட இந்தப் பதிவு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டிற்குள் நரி புகுந்ததை எண்ணி பலரும் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த விருந்தாளியை உணவிட்டு அனுப்பி வைத்த உங்களுக்கு நன்றி நட்டாஷா என்றும் நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளனர். நரி எங்கிருந்து வந்தது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், உணவில்லாமல் விலங்குகள் அவதிப்படுவது இதன் மூலம் தெரியவந்திருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

 
Published by:Sankaravadivoo G
First published: