சந்திரமுகி படம் வந்து 16 வருடங்கள் கடந்த பின்னும் அதன் தாக்கம் மக்களிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கன்னடம் , மலையாளம், தமிழ், ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான இந்த படம் இன்றும் பார்க்கும் அனைவருக்கும் திகில் உணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதே போல் அந்த படத்தில் நகைச்சுவைகள், மீம்கள். பாடல்கள் பயன்படுத்தாத இடமே இல்லை. ராரா பாடல் இல்லாத நடன மேதைகளும் இல்லை. அந்த உடை அணிந்து நடந்து வந்தாலே மனதிற்குள் தானாக ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். வேஷம் என்று மூளை சொன்னாலும் பேய் என்று மனம் அஞ்சும்.
வேலை முடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணித்துக்கொண்டு இருக்கும்போது சந்திரமுகி போல் உடை அணிந்த ஒருவர் உங்களிடம் வந்து நின்றால், எப்படி இருக்கும்? ஓடும் ரயிலுக்குள் ஒளிய இடம் தேடுவோம் அல்லவா? அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
மெட்ரோ ரயில்களில் நெட்பிளிக்ஸ் இளையதளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்களை பயணிகளுக்குக் காட்டும் விதமாக அந்த கதாபாத்திரங்கள் வேடமிட்டவர்கள் டெல்லி மெட்ரோ ரயிலில் உலா வரும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
அதை போலவே ஹிந்தியில் எடுக்கப்பட்ட பூல் புலாயா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்திரமுகி (ஹிந்தியில் மஞ்சுலிகா) போல் மஞ்சள் சேலை கட்டி, கலைந்த தலையோடு ஒரு பெண் மெட்ரோ ரயில் பெட்டியில் உலா வருகிறார்.
அவரது அலங்காரங்களை பார்த்து அந்த பெட்டியில் உள்ள பயணிகள் பயந்து ஓடுவதை காணலாம். அதே போல் அவர் வந்ததையும் அங்கு நடப்பதையும் கண்டுக்காமல் இயர்-போன் அணிந்து போனில் மூழ்கியிருந்த ஒரு பயணியை அவர் தட்டி அழைத்து பயன்படுத்துவதும், அவர் பதறி எழுந்து ஓடுவதையும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இவை அனைத்தும் தங்கள் படங்களையும் கதாபாத்திரங்களையும் மக்களுடன் இணைவதற்கான நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் உத்தியாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Netflix, Viral Video