தற்போது திருமணங்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திருமணமும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் அமைகிறது. ஆனால் பல்வேறு திருமணங்களில் டன் கணக்கில் உணவுகள் வீணாவது தவிர்க்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.
விருந்தினர்களுக்கு உணவு போதவில்லை என்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதால் தேவைக்கு மேல் உணவு சமைக்கப்படுகிறது. இறுதியாக இந்த உணவுகள் மிச்சம் ஆவதால் குப்பை தொட்டியில் கொட்டப்படும் அவல நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் உணவுகளை ஏழைக்கு கொடுக்க முன் வருகின்றனர், ஆனால் பெரும்பாலான திருமண வீட்டினர் இதனை முன்னெடுப்பதில்லை.
உணவு வீணடிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு பல்வேறு குழுக்களும் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறது. இவர்களுக்கு போன் செய்து சாப்பாடு மீதம் இருக்கும் தகவலை கூறினாலே போதும், அவர்களே வந்து சாப்பாட்டை வாங்கி உணவு இல்லாதவர்களுக்கு விநியோகித்து விடுவார்கள். இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் யாரையும் எதிர்பார்க்காமல் தானே முன்வந்து திருமணத்தில் எஞ்சிய உணவை ஏழைகளுக்கு விநியோகித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read : கர்மா ரிட்டர்ன்ஸ்.. நொடிப்பொழுதில் உணர்ந்து திருந்திய இளைஞர் - வைரலாகும் வீடியோ
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் இரவில் பெண் ஒருவர் உணவு விநியோகித்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில், அவரது அண்ணன் திருமணத்தில் உணவு மீதம் இருந்ததாகவும், அதனை வீணடிக்க விரும்பாமல் இங்கு உள்ளவர்களுக்கு கொடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
நிலஞ்சன் மொண்டல் என்ற புகைப்படக்காரர் அதிகாலை 1 மணியளவில் பாபி கர் ரணகாட் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இந்த காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் 'ig_calcutta' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், ரயில் நிலையில் சம்பிரதாய உடையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் உணவு நிறைந்த பாத்திரங்களுடன் அமர்ந்திருந்தார். அவர் உணவு தேவைப்படுபவர்களுக்கு காகிதத் தட்டுகளில் உணவு பரிமாற ஆரம்பித்தார். இதுகுறித்து பேசிய அந்த பெண், தனது சகோதரரின் திருமண வரவேற்பில் இருந்து உணவை எடுத்து வந்துள்ளதாக தெரிவித்தார். விழா முடிந்ததும் ஏராளமான உணவுகள் மீதிம் இருந்ததால் அதனை இங்கு கொண்டு வந்தேன் என்றார். அவரின் கருணை உணர்வை கண்டு நான் வியந்தேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் 9,000 மேற்பட்ட லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணில் செயலை பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர், "நான் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் எப்போது திருமணம் செய்தாலும் இதுபோல உதவியை செய்ய திட்டமிட்டேன். எனது டீனேஜ் வயதிலிருந்தே இந்த திட்டம் உள்ளது" என கமெண்ட் ஷேர் செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral