12 அங்குல முடியை வெட்டியதால் ரியாலிட்டி ஷோவில் அழுது மயங்கி விழுந்த பெண் : வைரல் வீடியோ..!

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

12 அங்குல முடியை வெட்டியதால் ரியாலிட்டி ஷோவில் அழுது மயங்கி விழுந்த பெண் : வைரல் வீடியோ..!
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
  • News18
  • Last Updated: October 15, 2019, 9:45 PM IST
  • Share this:
பெண்களுக்கு முடி மீதான ஆசை எப்போதுமே குறைந்ததில்லை. சில பெண்கள் நீளமாக முடி வைத்திருக்க விரும்புவார்கள். சிலர் குட்டையான முடி, சிலர் டாம் பாய் ஸ்டைல் கட் என முடிகளின் வழியே தங்களுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவார்கள்.

அப்படி துருக்கியைச் சேர்ந்த இந்த பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடைய நீளமான முடியை 12 அங்குலமாக வெட்டியதால் அழுது மயங்கி விழும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

துருக்கியில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பெண்களை அழைத்து வந்து அவர்களுக்கு மேக்அப் வல்லுநர்களை வைத்து அழகுபடுத்தி கூடுதல் அழகாகக் காண்பிக்கும். இந்த மாற்றம் முன்பு இருந்ததற்கும் தற்போதும் எந்த அளவு மாறியிருக்கிறார் என்பதை காட்டும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் இலைடா (İlayda) என்றப் பெண் கலந்துக் கொண்டுள்ளார்.


அதில் தலைமுடி மேக் ஓவர் குறித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு தலைமுடியில் ஸ்டைல் செய்யப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக இலைடாவின் தலைமுடியை ஹேர் ஸ்டைலிஸ்டான பிலால் 12 அங்குலம் வரை வெட்டி எடுக்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத இலைடா தன் தலைமுடி வெட்டி எடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அழுகிறார். உடனே அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைக்க உடனே மயங்கி விழுகிறார். அங்கிருந்த பெண் அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் குழுமியிருந்த அனைவரையும் அத்தனைக் காட்சிகளையும் அதிர்ச்சியாகக் காண்கின்றனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Watch Also:

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்