ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல் என எந்தவொரு உணவகத்திற்கும் நாம் சாப்பிட செல்லும்போது உணவின் தரம் மற்றும் சுவை போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் அந்த இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கும். குறிப்பாக, சுத்தம் நிறைந்த ரெஸ்டாரண்ட்கள் தான் நமது விருப்பப் பட்டியலில் முன்னணியில் இடம்பெறும்.
ஆனால், ரெஸ்டாரண்டை தூய்மையாக பராமரிப்பு செய்ததற்கான விலையை கொடுத்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த ரெண்டாரண்ட் ஒன்று. சிங்கப்பூரின் ரஃபேல்ஸ் சிட்டி பகுதியில் உள்ள புடியன் ரெஸ்டாரண்ட் பொதுவாகவே மிகுந்த சுத்தம் மற்றும் சுகாதரத்துடன் காணப்படும்.
இங்கு, ரெஸ்டாரண்டின் அழகியலை அதிகரிக்கும் வகையில் இங்கு கல் சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடி தடுப்புகளையே வைத்திருக்கின்றனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அந்தக் கண்ணாடி தடுப்புகளே வினையாகிப் போகும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கண்ணாடி தடுப்பில் மோதிக் கொண்ட பெண்
புடியன் ரெஸ்டாரண்டிற்கு கடந்த 1ஆம் தேதி ஸூ என்ற 53 வயதான பெண் மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்தார். தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த அவர், பணியாளரை அழைத்து கழிவறை எந்தப் பக்கம் இருக்கிறது என்று கேட்டார்.
அந்தப் பணியாளரும் கழிவறை செல்வதற்கான வழியை காண்பிடித்தார். இதைத் தொடர்ந்து, ஸூ எழுந்து நடந்து சென்றபோது, தடுப்புக் கண்ணாடி மிக சுத்தமாகவும், கறைகள் இன்றியும் இருந்ததால், அவரது கண்களுக்கு அது புலப்படவில்லை. திறந்தவெளி இடம் என நினைத்துக் கொண்டு நடந்து செல்கையில் கண்ணாடி தடுப்பு மீது அவர் மோதிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
Also Read : காதலியை இருட்டில் சந்திக்க இளைஞர் செய்த செயலால் ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சி
மன்னிப்பு கேட்ட ரெஸ்டாரண்ட்
பெண் வாடிக்கையாளரின் கவனக்குறைவு காரணமாகவே அவர் மோதிக் கொண்டார் என்றாலும் கூட, எளிதாக புலப்படும் வகையில் கண்ணாடி தடுப்பு இல்லை என்பதும் அதற்கு காரணம் தான். அந்த வகையில், ரெஸ்டாரண்ட் நிர்வாகம் ஸூ-விடம் மன்னிப்பு கேட்டது. அவர் ஆர்டர் செய்த உணவுக்கான பில் தொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டதுடன், கூடுதலாக சில உணவை இலவசமாக அவர்கள் வழங்கினர்.
Also Read : 125 அடி உயர ரோலர் கோஸ்டரில் பழுது - 45 நிமிடங்கள் தலைகீழாய் தொங்கிய சாகச விரும்பிகள்.!
மேலாளரின் பெருந்தன்மை
ஸூவிடம் மன்னிப்பு கேட்ட ரெஸ்டாரண்டின் மேலாளர், அருகாமையில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால், காயம் மிகச் சிறியது என்பதால் சிகிச்சை எதுவும் தேவையில்லை என்று ஸூ மறுத்துவிட்டார்.
Also Read : 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த நபர்.. வைரலாகும் பழைய வீடியோ..
இந்த விபத்தை தொடர்ந்து, ரெஸ்டாரண்டிற்கு அடுத்து வரக் கூடிய வாடிக்கையாளர்களும் கண்ணாடி தடுப்பு இருப்பது தெரியாமல் மோதிக் கொள்ளக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரெஸ்டாரண்ட் நிர்வாகம் எடுத்துள்ளது. கண்ணாடி தடுப்புகளுக்கு முன்பாக, நன்றாக தெரியும் வகையில் பாரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Restaurant, Singapore, Trending