ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 23 லென்ஸ்கள் - டாக்டரின் அதிர்ச்சி பதிவு

பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 23 லென்ஸ்கள் - டாக்டரின் அதிர்ச்சி பதிவு

பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 23 லென்ஸ்கள்

பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 23 லென்ஸ்கள்

Viral | நீங்கள் தான் அதிக லென்ஸ்கள் கண்ணில் சிக்கிக் கொண்டதற்கான கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்று அவர் கூறுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நம் நாட்டில் கண் சிகிச்சைக்காக செல்லும் பலர் தற்போது காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். முன்னர் பெருமளவு வழக்கத்தில் இல்லாத இந்த காண்டாக்ட் லென்ஸ் தற்போது பிரபலமடைந்து வருகிறது. மேலும் இந்த காண்டாக்ட் பயன்படுத்துவதில் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதனை சரியாக பராமரித்தல் என்பது மிகவும் முக்கியம். முக்கியமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் இந்த காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றி விட வேண்டும். இல்லையெனில் அவை சேதமடைவதற்கோ அல்லது கண்களை பாதிப்பதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன .

  அந்த வகையில் டாக்டர் கேத்தரினா 20வருடங்களுக்கும் மேலாக கண் மருத்துவராக இருந்து வருகிறார். இதுவரை நடந்திராத அதிர்ச்சியான சம்பவம் ஒன்று அவருக்கு தற்போது நடந்துள்ளது.கண்ணில் வலி அதிகமாக இருப்பதாக கூறி பெண் நோயாளி ஒருவர் கேத்ரினாவை சந்தித்துள்ளார். மேலும் தூங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் இந்த நோயாளியின் வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தன்னிடம் கண் வலி என்று சிகிச்சைக்கு வந்த பெண் அதிகமாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் பழக்கமுடையவராக இருக்கிறார். அப்படி பயன்படுத்தும் பொது ஒரு காண்டாக்ட் லென்ஸ் அவரின் கண்ணுக்குள் சிக்கி கொள்ள அதனால் தான் வலி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து சிக்கிக்கொண்ட காண்டாக்ட் லென்ஸை அகற்றும் வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


  அந்த வீடியோவில் மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கண்ணில் இருந்து காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றுவதற்கு தயாராகிறார். முதலில் ஒரே ஒரு லென்ஸ் மட்டுமே கண்ணின் மேல் புறத்தில் சிக்கிக் கொண்டிருப்பதைப் போல் தோன்ற, கேத்ரினா அதை அகற்றும் பொழுது வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இருபதுக்கும் மேற்பட்ட லென்ஸ்கள் அப்பெண்ணின் கண்ணில் இருந்து அகற்றப்படுகின்றன. இதை பார்த்த மருத்துவருக்கே முதலில் அதிர்ச்சியாகி விடுகிறது. நிறைய இருக்கின்றன என்று பதறிக் கொண்டே நீங்கள் தான் அதிக லென்ஸ்கள் கண்ணில் சிக்கிக் கொண்டதற்கான கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்று அவர் கூறுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

  Also Read : இந்த புகைப்படத்தில் இருப்பது எறும்பின் முகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

  சிகிச்சைக்கு வந்த அந்த பெண் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றாமல் அப்படியே தூங்கியதால் அவை கண்ணின் மேல் புறத்தில் சிக்கி இப்படி வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இது அவருக்கே தெரியாமல் இருந்துள்ளது. மேலும் அவை ஒன்றின் மீது ஒன்றோடு அடுக்கடுக்காகவும் சில மடங்கியது போலும் இருப்பதால் அவை அப்பெண்ணிற்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சைக்கு வரும்போது ஒரே ஒரு காண்டாக்ட் லென்ஸ் மட்டுமே சிக்கி உள்ளது என நினைத்த மருத்துவரும் வரிசையாக இத்தனை காண்டாக்ட் லென்ஸ் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. மொத்தமாக 23 கான்டாக்ட் லென்ஸ்களை அப்பெண்ணின் கண்ணில் இருந்து மருத்துவர் அகற்றி உள்ளார்.

  பலர் பெண்ணின் இந்த நிலைக்கு வருந்துவதாகவும், காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே இரவு தூங்கச் செல்வதால் இவ்வளவு விளைவுகள் ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  இதை பற்றி கூறிய ஷாரோன் கோப்ளான்ட் என்ற லென்ஸ் ஒளியியல் நிபுணர், காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து கொண்டே தூங்கச் செல்ல வேண்டாம் என மக்களை அறிவுறுத்தியுள்ளார் இதைப் பற்றி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு காண்டாக்ட் லென்ஸ்-உடன் தூங்கச் செல்வது பாக்டீரியாக்கள் உருவாவதற்கு இடம் கொடுத்து கண்ணில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் கண்ணில் எரிச்சல் மற்றும் கண் குருடு ஆகிய மிக கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இது மட்டுமல்லாமல் காண்டாக்ட் லென்ஸ்களைகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவை கண்ணிற்கு ஆக்சிஜன் செல்வதை தடை செய்கின்றது. ஏனெனில் நமது உடலிலேயே கண் மட்டும் தான் நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி ஆக்சிஜன் ஓட்டத்தை தடை செய்யும்போது அல்சர், வீக்கம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் இந்த காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து கொண்டு குட்டி தூக்கம் போடுவது என்பது கூட ஆபத்தில் சென்று முடியலாம் என்று எச்சரித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral