தடுப்பை மீறி சென்று சிங்கத்தின்முன் டான்ஸ் ஆடிய பெண்... வைரல் வீடியோ

தடுப்பை மீறி சென்று சிங்கத்தின்முன் டான்ஸ் ஆடிய பெண்... வைரல் வீடியோ
  • News18
  • Last Updated: October 4, 2019, 2:43 PM IST
  • Share this:
அமெரிக்காவிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் தடுப்பைக் கடந்து சிங்கத்திற்கு அருகில் சென்று ஹாய் சொல்லி நடனமாடும் வீடியோ வைரலாகப் பரவியது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரோன்க்ஸ் என்ற வன உயிரியல் பூங்காவில் தடுப்பு சுவர்களையும் மீறி பெண் ஒருவர் சிங்கத்தின் அருகில் செல்ல முயற்சிக்கிறார். சிங்கம் புரியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்க்கிறது. பின் அவர் சிங்கத்திடம் கை அசைத்து ஹாய் சொல்கிறார். பின் குதூகலத்தில் சிங்கத்தை மகிழ்ச்சி செய்ய நடனமாடுகிறார். பின் சிங்கம் அந்தப் பெண்ணை நோக்கி நகர்கிறது. உடனே அந்தப் பெண் பேபி ஐ லவ் யூ என்று சிங்கத்திடம் பேசுகிறார்.
இப்படியாக அந்த வீடியோ நிறைவடைகிறது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பொறுப்பற்று செய்யும் அந்த செயலை கண்டித்து உயிரியல் பூங்கா போலீஸில் புகார் அளித்துள்ளது.

”அந்தப் பெண் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஆபத்து செயல்களை தடுக்கத்தான் தடுப்புச் சுவர். அதையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார். மற்றவர்களும் இதுபோன்று செய்யாமல் இருக்கவே அந்தப் பெண் மீது புகார் அளித்துள்ளோம்” என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

பார்க்க :அதிக லாபம் ஈட்டும் மூலிகை சோப்பு தயாரிப்பது எப்படி?

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading