ஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..!

பெண் சி.இ.ஓ - வாக இவரின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது.

ஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..!
நடமாடும் சி.இ.ஓ
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 11:13 AM IST
  • Share this:
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் இந்த ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் வீடியோ பலரையும் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

இன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால் அதில் பாதிபேர் கார்ப்பரேட் அமைப்புகளுக்குள் பணி புரிபவர்களாகவே இருக்கக் கூடும். அதனாலேயே கர்ப்பரேட் அலுவலகங்களில் வேலைகளுக்கு நடுவே ஆக்டிவிடீஸ், நடனம் , விளையாட்டு என ஏற்பாடு செய்கின்றனர்.

அந்தவகையில் வெல்ஸ் பன் நிறுவனத்தின் சி.இ.ஓ ஊழியர்களை உற்சாகமூட்ட அலுவலக நேரத்தில் நடனமாடி மகிழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.தீபாலி கொயென்கா சிறந்த தலைமை நிர்வாகி என பலராலும் பாராட்டப்படுபவர். அந்த வகையில் இந்த வீடியோ பலரது சவால்களுக்கு பதிலாக இருக்கிறது. ஆண் சி.இ.ஓ - க்களில் எத்தனை பேர் இப்படி இருப்பார்கள், அதேபோல் சி.இ.ஓ- க்கள் இப்படி இறங்கி வந்து ஊழியர்களுக்காக நடமாடுவது என்பதும் காண அரிதானது. அந்த வகையில் சி.இ.ஓ தீபாலியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்பன போன்ற கருத்துக்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading