ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

9 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்பின் அதே இடத்தில் அதே பெண் - டெக்னாலஜிக்கும் தேஜா வூ.!

9 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்பின் அதே இடத்தில் அதே பெண் - டெக்னாலஜிக்கும் தேஜா வூ.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Google Maps - Deja Vu | கூகுள் மேப்ஸ்சுக்கே தேஜா வூ ஒன்று ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேஜா வூ பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு ஏதேனும் உணர்வு அல்லது ஏதேனும் சம்பவம் நடக்கும் போது அதை ஏற்கனவே நடந்து இருப்பது போல தோன்றும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதே மாதிரி இதே விஷயத்தை முன்னரே நீங்கள் பேசி இருக்கிறீர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகம் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டு நவீனமாக மாறி வந்தாலுமே, இதுபோன்ற புரிதலுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இன்னும் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் மேப்ஸ்சுக்கே தேஜா வூ ஒன்று ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ் ஒரு சில இடங்களைப் படம் பிடிக்கும். நம்முடைய வீடு அல்லது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது கூட கூகுள் மேப்சில் கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் படி, ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றிருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெண் அதே குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் கூகுள் மேப்ஸ் ஆல் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறார். இந்த ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் அந்தப் பெண் கருப்பு நிற ஆடைகளை அணிந்து இருக்கிறார்.

கதைகள், திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளை பார்த்து இருக்கிறோம். ஒரே இடத்தில் ஒரே மாதிரியான ஆடை அணிந்து, ஆனால் பல ஆண்டுகள் இடைவெளியில் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்போம். அது மாதிரி நிஜத்தில் நடந்தால், அது எந்த அளவுக்கு ஒரு விநோதமான நிகழ்வாக இருக்கும்! அதுதான் கூகுள் மேப்ஸ் படம் பிடித்திருக்கிறது.

லியோன் கார்ட்ரைட் என்ற பெண்ணை, கம்ப்ரியா என்ற விக்டோரியா பிளேஸ் என்ற போக்குவரத்து சிக்னல் கிராசிங்கில் முதன் முறையாக ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டு கூகுள் மேப்ஸ் படம் பிடித்திருக்கிறது. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு அதே பெண்ணை, அதே கிராசிங்கில் படம் பிடித்திருக்கிறது. முதல் முறை மார்க் செய்யப்பட்ட போது, அவர் கையில் பிங்க் நிறப் பை ஒன்றை வைத்திருக்கிறார். 2018 இல் எடுக்கப்பட்ட படத்தில் அவர் இரண்டு பைகளை வைத்திருக்கிறார்.

Also Read : பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனிக்கும் குரங்கு.. வைரல் வீடியோ..

காலம் உறைந்து போனது, எந்த மாற்றமும் இல்லை என்பது இந்த 9 ஆண்டு இடைவெளியில் கூகுள் மேப்ஸ் எடுத்த புகைபடங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். கார்ட்ரைட் அந்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் கணக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நான் அந்த கிராசிங்கில் அதே பேவிங் ஸ்லாபில் நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய தோள்பட்டையில் பையை மாட்டிக் கொண்டு இருக்கிறேன். இது எதுவுமே மாறவில்லை. இதைப் பார்க்கும் போது வேடிக்கையாகவும் விநோதமாகவும் தெரிகிறது. மக்கள் நான் ஒரு டைம் டிராவலர் என்று நினைக்கிறார்கள். ஆனால் உலகிலேயே நான் மட்டும் தான் அதே இடத்தில் கிட்டத்தட்ட அதே ஆடையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு படம் பிடிக்கப்பட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என பகிர்ந்து கொண்டுள்ளார்.

Also Read : 1970-யை சேர்ந்த இந்த படத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் யார்? 9 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

அதுமட்டுமில்லாமல் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மறுபடியும் பயன்படுத்துவேன் என்றும் கார் வருவது தெரிந்தால், அங்கிருக்கும் பொழுது அதே இடத்தில் மீண்டும் நிற்பேன் என்றும், மறுபடியும் கூகுள் மேப்ஸ் என்னை படம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். நீங்கள் மறுபடியும் என்னைப் பார்க்கலாம் இதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Google map, Trending