’நாங்கள் காதலிக்கிறோம்’ சிம்பன்சி குரங்கை காதலித்த பெண் - தடை விதித்த பூங்கா நிர்வாகம்!

சிம்பன்சி குரங்கு

பெல்ஜியத்தில் பூங்கா ஒன்றில் இருக்கும் சிம்பன்சி குரங்கை காதலித்த பெண்ணுக்கு பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

  • Share this:
பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப் (Antwerp zoo) விலங்கியல் பூங்கா உள்ளது. சிம்பன்சி குரங்கு முதல் அரிய வகை விலங்குகள் இருக்கும் இந்தப் பூங்காவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர். சின்பன்சி குரங்குள் இந்தப் பூங்காவின் ஸ்பெஷல் என்பதால், அதனை பார்க்க மக்களிடையே அதிகம் ஆர்வம் இருக்கும். அந்த பூங்காவிலேயே மிகவும் வயதான சிம்பன்சி குரங்கு ஒன்று உள்ளது. சிட்டா என்ற சிம்பன்சி குரங்கு சுமார் 30 ஆண்டுகளாக அந்தப் பூங்காவில் வசித்து வருகிறது. இந்தக் குரங்கை பார்ப்பதற்கு ஆடி திம்மரன்ஸ் (Adie Timmerans) என்ற பெண் அடிக்கடி சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணுக்கும், குரங்கு மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பார்க்கும்போதெல்லாம் இருவரும் முத்த மழை பொழிந்துள்ளனர். 4 ஆண்டுகளாக சிட்டா குரங்கிற்கும், இந்தப் பெண்ணிற்கும் இடையிலான உறவு நீடித்து வந்துள்ளது. இதனைக் கவனித்த பூங்கா நிர்வாகத்தினர், திம்மரன்ஸ் பூங்காவுக்கு வருவதை தடை செய்துள்ளனர். இதனால், திம்மரன்ஸ் அதிருப்தியடைந்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், பூங்கா நிர்வாகம் எனக்கு தடை விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது, நான் அதனை காதலிக்கிறேன், இதற்கு பூங்கா நிர்வாகம் ஏன் தடை விதிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்ட் வெர்ப் பூங்கா நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கத்தில், விலங்குகளின் நலன் மிகவும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளது. சிம்பன்சி அதிக நேரம் பார்வையாளர்களுடன் நேரத்தை செலவிடுவதால், அவற்றின் இனத்தைச் சேர்ந்த மற்ற குரங்கள் அதனை ஏற்றுகொள்வதில்லை என தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகம், இதனால் சிட்டா தனித்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பார்வையாளர்களுடன் அதிக நேரம் சிம்பன்சி செலவிடும்போது, அதன் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர்

மேலும், சிட்டாவின் இணை சிம்பன்சிகள் அதனை மதிப்பதில்லை எனவும், இது அதன் உடல் நலத்துக்கு கேடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தில், " பார்வையாளர்களின் வருகை அனுமதிக்கப்படும் 9 மணி நேரம் போக, எஞ்சிய 15 மணி நேரம் அது சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. கூடுதலான நேரம் பார்வையாளர்களுடன் சிட்டா இருப்பதால், அதனை சக சிம்பன்சிகள் மதிப்பதில்லை.

Also read... ஸ்கூட்டரில் மறைந்திருந்த பாம்பு மீட்பு... பதற வைக்கும் வீடியோ

இணை சிம்பன்சிகள் சிட்டாவை தவிர்க்கின்றன. சிட்டாவுக்கும் சக சிம்பன்சிகள் மீதான ஈர்ப்பு குறைகிறது. இணையை விட்டுவிட்டு தனியாக அமர்ந்து கொள்கிறது. இது சரியான போக்கு அல்ல என்பதால், தீவிரமாக ஆலோசித்து, அதனுடைய ஆரோக்கியத்துக்கு உகந்த கட்டுப்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களும், விலங்குகளும் அக்கறையுடன் இருப்பது நல்லது என்றாலும், அவற்றின் நலன் என்று வரும்போது அதற்கு மட்டுமே முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என கூறியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: