ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஏமாற்றிய கணவரின் முகத்தைக் கன்னத்தில் பச்சைக்குத்திய மனைவி.. இணையத்தில் வீடியோ வைரல்!

ஏமாற்றிய கணவரின் முகத்தைக் கன்னத்தில் பச்சைக்குத்திய மனைவி.. இணையத்தில் வீடியோ வைரல்!

நராலி

நராலி

பிரசவ காலத்தில் எனக்கும் அவளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டதையும், நான் ஏமாற்றியதையும் கண்டுபிடித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டாட்டூ எனப்படும் பச்சைக்குத்தும் பழக்கம் என்பது சமீப காலங்களாக இளைஞர்களுக்கிடையே அதிகரித்து வருகிறது. காதலில் ஜெயித்தாலும்,தோற்றத்தாலும் அதற்கேற்ப பச்சைக்குத்திக்கொள்வது, மற்றவர்களிடமிருந்து தனித்துவமாகத் தெரிவதற்கும், கணவன் மற்றும் மனைவி தங்களுடைய அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துவதற்கு என பல விஷயங்களுக்காக இன்றைக்கு பச்சைக்குத்திக் கொள்கிறார்கள்.

  இவ்வாறு தங்களின் அன்பை வெளிப்படுத்துவதற்காக கழுத்து, கை, மார்பு, கால்  உள்ளிட்ட இடங்களில் பச்சைக்குத்தி வந்த நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக பெண் ஒருவர் தன்னுடைய கன்னத்தில் பச்சைக்குத்தியுள்ளது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் இதற்கானக் காரணம் என்ன தெரிந்துக் கொள்ளும் போது, நம்மை இந்த டாட்டூ ஆச்சரியப்படுத்தியது.

  இன்றைக்கு ஒருவரின் குடும்பம் மற்றும் அவரின் தற்போதைய நிலைக்குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் டிக் டாக் வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டா ரீல்களைப் பார்த்தால் போதும். இதுபோன்று தான் டிக் டாக்கில் நராலி என்ற பெண் தன்னுடைய குடும்பம் பற்றிய அவ்வப்போது வீடியோவாக வெளியிடுவது வழக்கம். எப்போதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வீடியோக்களை மட்டும் பதிவிட்டு வந்த இவர், திடீரென தன்னுடைய கணவர் ஏமாற்றிவிட்டதாக வீடியோ பதிவிட்டது இவரின் இணைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  இந்த வீடியோவில், சமீபத்தில் தான் தங்களுக்கு குழந்தைப் பிறந்தது என்றும் இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், தன்னுடைய கணவர் லாரா தன்னை ஏமாற்றுவது தெரிய வந்தது. அதுவும் ‘ நான் பிரசவ வலியும் இருக்கும் போது கேள்விப்பட்ட செய்தி என்னை மிகவும் வேதனையாக்கியது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பா என்று அழைக்கும் தங்களின் சிறு குழந்தைக்காக தன்னிடம் மீண்டும் வந்து சேர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வீடியோ வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

  இதில் உங்களுக்கு பிடித்த பானம் எதுவென்று சொல்லுங்கள்.! உங்களின் ஆளுமை பற்றி நாங்கள் சொல்கிறோம்

  இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன் எனவும், இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என்றும், ஒரு ஆண்டு காலத்தில், நீங்கள் போட்டுள்ள டாட்டூ மறைந்துவிடும் என்பது போன்ற கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

  ' isDesktop="true" id="832503" youtubeid="7ghuD8nzsGE" category="trend">

  விமான நிலையத்தில் திக்குமுக்காடிய வயதான தம்பதியர் - உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.!

  மேலும் இதுகுறித்து பதிலளித்த நராலின் கணவர், பிரசவ காலத்தில் எனக்கும் அவளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டதையும், நான் ஏமாற்றியதையும் கண்டுபிடித்தார். ஆனால் நான் இனி இதுபோன்று செய்ய மாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்டும் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என வைரலாகும் வீடியோவிற்குப் பதில் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். என்ன இருந்தாலும் பிரசவ காலத்தில் மனைவிக்குத் துணையாக இருக்க வேண்டியவர் ஏமாற்றியது நிச்சயம் கண்டித்தக்கது என்றும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending News, Trending Video