LinkedIn என்பது தொழில்ரீதியான ஒரு சமூக நெட்வொர்கிங் தளம். அதில் பல நாடுகளில் உள்ளவர்களுடன், பல துறைகளில் உள்ளவர்களுடன் எளிதில் கனக்ட் ஆகலாம். சரியான நெட்வொர்க்கிங் மூலம், உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு விவரங்களை விரல் நுனியில் பெறலாம். தொழில் ரீதியாக, நல்ல வேலை வாய்ப்புகளை பெற உதவும் LinkedIn தளத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். LinkedIn யூசர்கள் தங்கள் கல்வி, வேலை அனுபவம், திறன் என்று யூசர் புரொபைலை தெளிவாக வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட அனுபவம் / திறன் சார்ந்த வேலைவாய்ப்பு வந்தால், அதை வழங்குபவர்களே யூசர்களை தேடி வருவார்கள். அந்த வகையில், ஒரு பெண் தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்த அனுபவம் பார்வையாளர்களை இரண்டு தரப்பில் பிரிய வைத்து, பெரிய விவாதமாக மாற்றியுள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த ஆரியல் எகோட்ஸி என்ற பெண், தனது லின்க்டுஇன் புரொபைலில், ‘sex worker’ என்று, அதாவது தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு, இந்த தளத்தில் 9000 ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது வேலை அனுபவம் என்ற பகுதியில், பாலியில் தொழில் குறித்து இவர் சேர்த்துள்ளார். அது மட்டுமில்லாமல், அதற்கு மிகப்பெரிய விளக்கமும் அளித்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி, பெரிய விவாதமாக மாறியுள்ளது.
“ஃபேன்சியான பல்வேறு நன்மைகளை வழங்கும் எனது வேலையில் இருந்து இரண்டு வாரம் முன்பு தான் ராஜினாமா செய்தேன். இதனால், நான் பாலியல் தொழிலில் ஈடுபட முடியும். மேலும், விற்பனை பிரிவில் வேலை செய்ததில், போதிய அளவுக்கு சேமித்துள்ளேன் என்று நினைக்கிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பதை என்னாலே கேட்டுக் கொள்ள முடியவில்லை. இல்லை என்று எனக்கு தெரியும். சில நேரங்களில், நாம் சம்பாதித்த பணம் உதவியிருக்கிறது. ஆனால், நான் வேலையை ராஜினாமா செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டதை சுதந்திரமாக, எனக்கென்று நான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையும் ஆற்றலும் என்னிடம் இருப்பதை உணர முடிந்தது. அது மட்டுமில்லாமல், நான் பாலியல் தொழிலில் அதிகமாக சார்ஜ் செய்வேன்” என்று பதிவில் விளக்கியிருந்தார்.
Also Read : முதலை வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்கிறான் என கிராம மக்கள் எடுத்த முடிவு... அடுத்து நடந்தது?
அது மட்டுமில்லாமல், எமோஷனல் லேபர் என்பது பற்றியும் எகொட்ஸி பேசியிருந்தார். ‘பணம் செலுத்த விருப்பமில்லாமல் என்னை ரிஜக்ட் செய்பவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால், நான் கட்டணமாக பெற விரும்புவது, எமோஷனல் லேபர் கட்டணத்துக்குத் தான்’ என்றார். மேலும், எல்லைகள் வகுத்திருப்பதாகவும், பாதுகாப்பான, விளையாட்டுத்தனமான, தான் விரும்பும் வழியில் தான் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருந்தார். எந்த விஷயத்துக்காகவும் தன்னுடைய விலைமதிப்பிலாத நேரத்தை செலவிட விரும்பவில்லை என்று ஆணித்தரமாக கூறினார். மேலும், தன்னை பற்றி யாரிடமும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமோ, பேரம் பேச வேண்டிய தேவையோ இல்லை என்றும் தெரிவித்தார். மற்ற வேலைகளை விட, பாலியல் வேலை ஒன்றும் வித்தியாசமானதாக இல்லை என்றும், புதிய வருமானம் ஈட்டும் வழியாக, அதிக அதே நேரத்தில் கண்ணியமான வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு linkedin தளத்தில் பகிர்ந்ததாகவும் கூறினார்.
இவரின் பதிவு 8,000க்கும் மேற்பட்ட ரியாக்ஷன்களையும், 1500 க்கும் மேற்பட்ட கமெண்டுகளையும் இதுவரை பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கருகலைப்பு எப்படி ஒரு பெண்ணின் உரிமையோ, இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள், கட்டுமானப் பணியாளர்கள் எவ்வாறு தங்கள் உடல் வைத்து வருமானம் ஈட்டுகிறார்களோ, பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு பெண்ணின் விருப்பமும் உரிமையும். எல்லாருமே மென்பொருள் துறையிலோ, ஆசிரியராகவோ, கணக்காளராகவோ முடியாது. தன்னுடைய விருப்பத்தின் பேரில் ஒரு பெண் பாலியல் தொழிலில் உடல் மூலமாக வருமானம் ஈட்டுவது, முழுக்க முழுக்க அப்பெண்ணின் விருப்பம், என்று ஒரு யூசர் கமெண்ட் செய்திருந்தார்.
அதே நேரத்தில் மற்றொரு யூசர் அவர் செய்திருப்பது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும், யாரேனும் இதன் மூலம் அவரை காயப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கண்ணாடியில் உங்களைப் பார்க்கும் போது, குளிக்கும் போது நிரப்ப முடியாத ஏதோ ஒன்றை இழந்ததாக உணர மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், பாலியல் உறவின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது என்று மற்றொருவர் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.