Twitter trending Today: குக்கூ குக்கூ... ட்விட்டர் போச்சா... வாழ்த்து சொல்லும் பௌத்தர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

இன்றைய தினம் ட்விட்டரில் #TwitterBanInIndia , #Buddhism , #Wednesdayvibe , #VesakDay , Koo App , WhatsApp , #wednesdaythought,#NationalBlackDay,#Black_Day_Of_Farmers,#BuddhaPurnima போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

 • Share this:
  இன்றையதினம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக்குகள் TwitterBanInIndia , InstagramBan ,WhatsApp , FacebookBan போன்றவை.

  புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதால், இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அரசின் விதிகளை ஏற்க தயார் என ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம், மத்திய அரசின் விதிகளுக்கு இணங்குவதை தாங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாகவும், ஆனால் அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.  இதற்கிடையே, திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளால் பயனர்களின் தனிநபர் தகவல்களின் ரகசியம் பறிபோகாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தனியுரிமைக் கொள்கையை ஏற்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படாது என்றும், அதுபற்றி பயனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கொரோனாவால் வீட்டில் முடங்கி இருக்கும் இளைஞர்களுக்கும், வயோதிகர்களுக்கும் , குழந்தைகளுக்கும் மிகப் பெரிய வரப்ரசாத பொழுதுபோக்கு ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை. இவை தீடீரென தடை செய்யப்படும் என்ற செய்தி கேட்டு இணையவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இது தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளன.

  ALSO READ | நம்பர் 1 இடத்தில் ரம்யா பாண்டியன்... பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

   

      

     இதற்க்கு அடுத்த படியாக ட்விட்டரில் இன்று வாழ்த்துக்களும், தத்துவங்களும் நிரம்ப ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் Buddhism , VesakDay.  புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். புத்தரை இந்து மதத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதுகின்றனர்.

      

      

  புத்த மதத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பினும் கொள்கைகள் அனைத்தும் புத்தருடையதே ஆகும். அது வாழ்வை நெறிபடுத்தும் என்பது உண்மை. இந்த ஆண்டு இன்று (மே 26) பூர்ண முழுமதி நாளான இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக்கில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

  ALSO READ | 'அராத்து பூர்ணிமாவின் லூட்டி முதல் ரோஜா சீரியலின் ப்ரோமோ வரை' - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

  அடுத்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் Black_Day_Of_Farmers, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தைத் துவங்கி ஆறு மாத காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த டேக் ட்ரெண்டாகியுள்ளது. இதில் பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

   

      

      

  ALSO READ |  தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB.. வூஹானில் நடப்பது என்ன? - இணையத்தில் இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

  அடுத்தபடியாக ட்ரெண்டாகியுள்ளது Koo App. பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ட்விட்டர் போலவே இருக்கும் Koo என்ற செயலியை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் ஆகியோர் ஏற்கனவே பிரபலப்படுத்தி வந்தனர். எப்போதெல்லாம் ட்விட்டர் தடை என பிரச்சனை தலை கூக்குகின்றதோ அப்போதெல்லாம் கூடவே கூ ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள் என மற்றொரு டேக்கும் ட்ரெண்டாகுவது வழக்கமாய் உள்ளது.

   

      

      

      

      

  அடுத்ததாக காலை முதலே ட்ரெண்டிங்கில் உள்ளது wednesdaythought .

   

      

      

  இன்றைய தினம் புதன் கிழமை. ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றவாறு தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவ வசனங்களும் தினமும் ட்விட்டரில் இடம் பெரும் அவை அன்றைய நாளுக்கான டேக்கோடு ட்ரெண்டாகும். அந்த டேக்கில் பலரும் தங்கள் காலை வணக்கத்தை பதிவிடுவர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: