இந்தியர்கள் சூட்கேஸ்களாக இருந்திருக்கலாம்... சூட்கேஸ்களைப் பாராட்டும் ட்விட்டர்...!

ட்விட்டரில் இந்த வீடியோ பதிவு 51 ஆயிரம் லைக்குகள் உடன் 28 ஆயிரம் ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்தியர்கள் சூட்கேஸ்களாக இருந்திருக்கலாம்... சூட்கேஸ்களைப் பாராட்டும் ட்விட்டர்...!
’பொறுமை’ சூட்கேஸ்கள்
  • News18
  • Last Updated: December 7, 2019, 1:47 PM IST
  • Share this:
விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட் வழியாகப் பயணிகளின் சூட்கேஸ்கள் வரும் வீடியோ காட்சி மனிதருக்கு பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என ட்விட்டர்வாசிகள் வைரல் செய்து வருகின்றனர்.

வீடியோவில் சிங்கப்பூரின் ஷாங்காய் விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட் வழியாக பயணிகளின் சூட்கேஸ்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறன. இரண்டு புறமிருந்து சூட்கேஸ்கள் வந்து ஒரே வரிசையில் சங்கமிக்கும் இடத்தில் மற்றொரு சூட்கேஸுக்கு வழிவிட்டு ஒவ்வொரு சூட்கேஸும் நின்று பொறுமையாகக் காத்திருந்து செல்கிறது.

இது கன்வேயர் பெல்ட் வழியாக என்றாலும் ’இதே போல் இந்தியர்கள் ஒருவருக்கு ஒருவர் வழிவிட்டு பொறுமையைக் கடைபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என இந்திய ட்விட்டர்வாசிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டரில் இந்த வீடியோ பதிவு 51 ஆயிரம் லைக்குகள் உடன் 28 ஆயிரம் ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது.மேலும் பார்க்க: பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்