Home /News /trend /

கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! (வீடியோ)

கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! (வீடியோ)

கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! (வீடியோ)

கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! (வீடியோ)

நீர்வீழ்ச்சியில்  விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் அதிசய நிகழ்வின் வைரல் வீடியோ.

    பருவ மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவது வழக்கமான ஒன்று என்றாலும், அதனை நேரில் கண்டுகளிப்பதை விட ஆனந்தம் இருக்க முடியாது. அதனால், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் இயற்கை அழகை ரசிக்க நம்மில் பலரும் சுற்றுலா செல்வதும் வாடிக்கையான ஒன்றாகும்.

    இதுபோன்று சுற்றுலா செல்ல குறிப்பாக இயற்கை எழில் ரம்மியமாக இருக்க கூடிய இடங்களை தேர்வு செய்கின்றனர். அருவிகள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், கடல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிகளுக்கு அதிக பேர் சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் பல சுற்றுலா தளங்கள் முழுக்க முழுக்க இயற்கை எழில் சூழ்ந்தவையாக இருக்கும் இடங்கள் உள்ளன. அதில், துத்சாகர் நீர்வீழ்ச்சி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, துவாந்தர் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

    அந்தவகையில், சமீபத்தில் கூட ஜோக் நீர்வீழ்ச்சியில் ஜோக் நீர்வீழ்ச்சியில்  விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் அதிசய நிகழ்வு 2 நாட்களாக நடந்தது. இந்த அருவியில் தண்ணீர் 4 கிளைகளாக பிரிந்து விழுகிறது. அந்த 4 நீர்வீழ்ச்சிகளுக்கும் ரோஜர், ராக்கெட், ராஜா, ராணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கிவிட்டது போல் குறைவான நீர் மட்டுமே விழுகிறது.



    இதேபோல், மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நானேகாட் நீர்வீழ்ச்சியிலும் விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் நிகழ்வு நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நானேகாட் நீர்வீழ்ச்சியில் நடந்த வியப்பான நிகழ்வின் காணொளி என்று அவர் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Falls

    அடுத்த செய்தி