ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டி சென்ற கூலி தொழிலாளியின் மகள்!

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டி சென்ற கூலி தொழிலாளியின் மகள்!

ரக்சயா

ரக்சயா

Miss Tamilnadu: இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்சயா.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர், Forever Star India Awards நடத்திய அழகிப்போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனைப்படைத்துள்ளார்.

  செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரது மகள் ரக்சயா(20). கல்லூரி படிப்பை முடித்த இவர், அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார்.

  கடந்த 2018ம் ஆண்டு நடந்த ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர், அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார்.

  அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் தேசிய அளவிலான போட்டி, செப்டம்பர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ரக்சயா ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

  மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்வாகும் நபர், ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார். இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்சயா.

  இதையும் வாசிக்க: ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்கள் ஏற்றத்தை கணக்கிடுவது திராவிட மாடல் - நியூஸ் 18 நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், சிறு வயது முதலே ரக்சயா, விளையாட்டின் மீது ஆர்வமாக கொண்டவர். மேலும் தாங்கள் அதை ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் என தெரிவித்தனர். தொடர்ந்து வறுமையில் இருந்த பொழுது, சிலர் ரக்சயாவின் படிப்பிற்கு உதவினர். தற்போது அவர் தன் விடாமுயற்சியால் தற்பொழுது ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ளார் என தெரிவித்தனர்.

  செய்தியாளர்- ராபர்ட் எபினேசர்,  செங்கல்பட்டு

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chengalpattu, India, Tamilnadu