முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மூன்று தலைகள் கொண்ட சிறுத்தையா? இணையவாசிகளை குழப்பிய போட்டோ.. உண்மை இதுதான்!

மூன்று தலைகள் கொண்ட சிறுத்தையா? இணையவாசிகளை குழப்பிய போட்டோ.. உண்மை இதுதான்!

மூன்று தலைகள் கொண்ட சிறுத்தை

மூன்று தலைகள் கொண்ட சிறுத்தை

Three headed cheetah viral photos : மூன்று தலைகளைக் கொண்டு சிறுத்தைகளை புகைப்படமாக வெளியிட்ட வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் பதிவு வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaKenya Kenya

மூன்று தலைகளைக் கொண்ட சிறுத்தை உண்மையில் உள்ளதா என்று சந்தேகத்தை எழுப்பும் வகையில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அவரின் புகைப்படம் சாத்தியமா என்று ஆச்சிரியத்துடன் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படத்தின் உண்மை என்ன?

உண்மையில் மூன்று சிறுத்தைகள் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதை நேர் திசையில் இருந்து அவர் புகைப்படமாக எடுத்திருப்பார். அது பார்ப்பதற்கு அப்படியே ஒரே உடலில் மூன்று சிறுத்தையில் முகம் இருப்பது போல் தோற்றம் தரும். இது போன்று காட்சியை எளிமையாக எடுத்து விட முடியாது. இந்த அபூர்வமான புகைப்படத்தை விம்பிள்டன் பகுதியைச் சேர்ந்த பால் கோல்ட்ஸ்டைன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்துள்ளார்.

கென்யாவில் அமைந்துள்ள மசாய் மாரா தேசிய பூங்காவின் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரியான புகைப்படத்தை எடுக்க அவர் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்துக்கொண்டு இருந்ததாக என்று கூறியுள்ளார்.

Also Read : கடல் அலையில் தெரிந்த முகம்..! டைமிங்கில் செம க்ளிக்.. வியக்க வைக்கும் புகைப்படம்.!

மழை பெய்துகொண்டு இருக்கும் போது சுமார் 6 மணி நேரம் காத்திருப்பில் இந்த அபூர்வமான காட்சியை அவர் கேமரா மூலம் பதிவு செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். சிறுத்தைகள் அழிந்துகொண்டு இருக்கும் விலங்குகளில் ஒன்றாக உள்ளது. மணிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் ஓடும் சிறுத்தைகளை ஒன்றாய் ஒரே கோட்டில் புகைப்படமாக எடுத்த புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

First published:

Tags: Photography, Viral, Viral News