• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ!

ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ!

ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன்

ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன்

இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து இந்த வீடியோ, சமூக ஊடங்கங்களில் பெரும் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

  • Share this:
வனவிலங்கு நிபுணர் ஒருவரின் 2 வயது மகன் ராட்சத பாம்புடன் விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளிக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகள் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளுடன் விளையாடுவதை பார்த்திருப்போம். ஏன் விஷமில்லாத சிறிய வகை பாம்புகளுடன் விளையாடுவதை கூட பார்த்திருப்போம். ஆனால், இங்கு அதிக விஷமுள்ள பெரியவர்களே அஞ்சும் ராட்சத பாம்புடன் 2 வயது சிறுவன் விளையாடி பார்த்திருக்கிறீர்களா? இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோல பயமுறுத்தும் செயல்களை குழந்தைகள் செய்ய அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் 2 வயது சிறுவனின் தந்தையே பாம்பு பிடிப்பதை ஊக்கப்படுத்துகிறார். ஏன் அவர் அப்படி செய்கிறார்? அவர் குழந்தையை தடுக்கவில்லையா? என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அந்த குழந்தையின் தந்தை வேலை பார்ப்பது ஐ.டி கம்பெனியில் அல்ல. அவர் வேலை செய்வது காடுகளில் தான். மேலும் அவர் ஒரு வனவிலங்கு நிபுணர் ஆவர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘மான்ஸ்டர் க்ரோக் ராங்லர் மாட் ரைட்’ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதில் தனது இரண்டு வயது மகன் ‘பொன்ஜோ’ தோட்டத்தில் இருந்து ஒரு பெரிய மலைப்பாம்பை அதன் வாலில் அடித்து இழுத்து வருகிறான்.

இந்த வீடியோவை காண :
இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து இந்த வீடியோ, சமூக ஊடங்கங்களில் பெரும் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. அதில் பயமில்லாத அந்த குழந்தை இரண்டு மீட்டர் அளவிலான மலைப்பாம்பின் வாலை இரண்டு கைகளாலும் பிடித்து, புல் மீது இழுக்கத் தொடங்குகிறது. இதனால் சிறு குழந்தையை இதுபோல் செயல்களை செய்யவிடுவது தவறு என கண்டனங்கள் எழுந்துள்ளது.

"சீக்கிரம், அவனைப் பிடி, அவன் அப்பாவைக் கடிக்கப் போகிறான்," என்று அக்குழந்தையின் அப்பாவான ரைட் கூறுகிறார். உடனே குழந்தை பொன்ஜோ அந்த பாம்பின் வாலைப் பிடித்து இழுக்கிறான். இந்த வகை மலைப்பாம்புகள் விஷமற்றவை. இது மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை என்றாலும், குழந்தைகளை பாம்பை பிடிக்க செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று வீடியோவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்கு விஷம் மற்றும் விஷம் இல்லாத ஊர்வன எது என வேறுபடுத்தி பார்க்க தெரியாது என்பதால் பெற்றோர்கள் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது தவறு என நெட்டிசன்கள் கண்டனங்கள் கூறி வருகின்றனர். மேலும் சிலர் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதால் இப்படி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே சிலர் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்கள் வனவிலங்குகளுடன் நெருக்கமாக வாழ்வது மிகவும் சாதாரணமான விஷயம் தான் என்றும், விலங்குகளை எப்படி கையாள்வது என்பதை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்பிப்பது நல்லது என்றும் கூறி வருகின்றனர்.

Also read... காலி விமானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு டான்ஸ் - சோஷியல் மீடியாவை கலக்கும் ஏர் ஹோஸ்டஸின் ரீல்!

அக்குழந்தையின் பெற்றோரரான ரைட் மற்றும் அவரது மனைவிக்கு தங்கள் மகனுக்கு எது சிறந்தது என்று தெரியும், அவர்களது குழந்தையை ஆபத்தில் வைக்க மாட்டார்கள் என்றும் வாதிட்டனர். இந்த குழந்தையின் அப்பாவான ரைட் குடும்பம் சாகசங்களுக்கு பெயர் பெற்ற குடும்பமாகும். ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பெரிய முதலைகளுடன் சண்டையிடுவதே இவர்களின் முக்கிய வேலையே.

சுருக்கமாக சொல்வதென்றால் காட்டில் உள்ள விலங்குகளுடன் வாழ்வதே இவர்களின் வேலை. எது எப்படியோ இந்த காணொளியை சிலர் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்தாலும், பெரும்பாலானோர் இவர்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: