ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Viral Video : கூடைப்பந்து விளையாடிய காட்டு யானை - வைரல் வீடியோ!

Viral Video : கூடைப்பந்து விளையாடிய காட்டு யானை - வைரல் வீடியோ!

கூடைப்பந்து விளையாடிய காட்டு யானை

கூடைப்பந்து விளையாடிய காட்டு யானை

இந்த வீடியோ அசாம் மாநிலம் கவுகாத்தியில் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கவுகாத்தியில் ராணுவ குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த கூடைப்பந்தை எடுத்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில், காட்டு யானை ஒன்று குடியிருப்பு அருகாமையில் இருக்கும் மைதானத்துக்குள் நுழைந்துள்ளது. அங்கு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அவர்களிடம் இருந்த பந்து யானை வசம் சென்றுள்ளது. பந்தை எடுத்துக் கொண்ட காட்டு யானை, சாலையில் நடந்து செல்கிறது.

இதனைப் பார்த்து வியப்படைந்த அங்கிருந்த இளைஞர்கள், யானை பந்தை எடுத்துச் செல்வதை வீடியோ எடுக்கத் தொடங்கினர். மேலும், பந்தை கொடுக்குமாறு யானையிடம் மன்றாடுகின்றனர். அவர்களின் குரலுக்கு துளியும் செவிசாய்க்காத காட்டுயானை, நடந்து சென்றுவாறே பந்தை எடுத்து விளையாடுகிறது.

ALSO READ | மூக்கின் மூலம் செல்போன் இயக்கி, டிக் டாக்கில் டான்ஸ் வீடியோ பதிவிட்ட நாய் - வைரல் வீடியோ!

இந்த வீடியோ அசாம் மாநிலம் கவுகாத்தியில் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. நாரங்கி பகுதியில் உள்ள சாட்கான் ராணுவ கேம்ப்க்குள் புகுந்த காட்டுயானை, இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்துக்கு அருகாமையில் சென்றுள்ளது. யானை வந்ததை ஆர்வமுடன் இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, கூடைப்பந்து யானை வசம் சென்றுள்ளது.

இது குறித்து அங்கிருந்த இளைஞர் ஒருவர் பேசும்போது, காட்டு யானை எங்கிருந்து வந்தது என எங்களுக்கு தெரியவில்லை எனக் கூறினார். வழக்கம்போல் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென திரும்பி பார்க்கும்போது மைதானத்துக்கு அருகாமையில் இருக்கும் சாலையில் யானை நடந்து சென்றுகொண்டிருந்து.

' isDesktop="true" id="482525" youtubeid="NT1ZLfHHy54" category="trend">

விளையாடியவர்கள் யானையை பார்த்துக்கொண்டிருந்தபோது, பந்து யானைக்கு அருகாமையில் சென்று விழுந்தது. நாங்கள் பந்தைக் கொடுக்குமாறு கூச்சலிட்டோம். ஆனால், எங்களின் குரலை கண்டுகொள்ளாத யானை பந்தை எடுத்து விளையாடியது. இதற்கு முன்னர் யானையை இவ்வளவு குறுகிய இடைவெளியில் பார்த்தது இல்லை.

எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் எங்களை எதுவும் செய்யவில்லை, நாங்களும் அதற்கு சொந்தரவு கொடுக்கவில்லை எனக் கூறினார். இதேபோல், கடந்த வாரம் ஒரு யானையின் வீடியோ அசாமில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சாலையில் பைக் ஒன்று நின்று கொண்டிருக்கிறது.

ALSO READ | 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சுறா மீன் இனம் கண்டுபிடிப்பு!

அந்த வழியாக நடந்து வரும் காட்டு யானை இருச்சக்கர வாகனத்தின் அருகில் செல்கிறது. வண்டியில் இருந்த ஹெல்மெட்டை பார்த்தவுடன், அதனை பழம் என நினைத்து எடுத்து விழுங்கத் தொடங்கியது. கவுகாத்தி நகருக்கு அருகாமையில் அம்சாங் வனவிலங்கு சரணாலயம் (Amchang Wildlife Sanctuary) இருப்பதால், அந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருக்கிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அந்தப் பகுதியில் அவ்வப்போது உலாவும். வாடிக்கையான நிகழ்வு என்றாலும், ஒவ்வொரு முறையும் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அங்கு உலாவுவதை அப்பகுதிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video