ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

என் கணவரின் சம்பளம் எவ்வளவு? தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்திய மனைவி.. அடுத்து நடந்தது?

என் கணவரின் சம்பளம் எவ்வளவு? தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்திய மனைவி.. அடுத்து நடந்தது?

மாதிரி படம்

மாதிரி படம்

ஆணுக்கு அதிகமாக சொத்து இருக்கும் போது, விவாகரத்து செய்ய போகும் மனைவிக்கு கொடுக்க விரும்பாத பட்சத்தில் அதை மறைக்கும்படி பலரும் நடந்துள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தகவல் அறியும் சட்டம் பற்றி அனைவருமே அறிந்திருப்பீர்கள். பொதுமக்களுக்கு உரிய உரிமைகள் முதல் பல விஷயங்களையும் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிந்துகொள்ள முடியும். தகவல் அறியும் சட்டம் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த விஷயத்தையெல்லாம் கூட தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு பெண்மணி ஒரு விவரத்தைப் பெற்றிருக்கிறார். தன்னுடைய கணவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பற்றிய விவரத்தை தகவல் அறியும் சட்டத்தில் ஒரு விண்ணப்பம் செய்து அதன் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

சஞ்சீவ் குப்தா என்ற நபரின் மனைவி தன்னுடைய கணவன் கடந்த இரண்டு நிதியாண்டுகளாக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளார் என்ற விவரத்தை தெரிந்து கொள்வதற்காக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்தை மேற்கொண்டிருக்கிறார்

ஆண் மற்றும் பெண்களுக்கான சட்ட உரிமை, அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்று பெரும்பாலான நெருக்கடியான சூழலில் தகவல் அறியும் சட்டம் உதவியாக இருக்கும். குறிப்பாக, சொத்து விவகாரம் மற்றும் விவாகரத்து கோரும்போது ஜீவனாம்சம், மனைவிக்குரிய சொத்து, பெண்களுக்குரிய பங்கு என்று எல்லா என்று பலருக்கும் தெரியாத விஷயங்களை தகவல் அறியும் சட்டம் சட்டத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

ஆணுக்கு அதிகமாக சொத்து இருக்கும் போது, விவாகரத்து செய்ய போகும் மனைவிக்கு கொடுக்க விரும்பாத பட்சத்தில் அதை மறைக்கும்படி பலரும் நடந்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. விவகாரத்தில் ஜீவனாம்சம் மற்றும் சொத்தில் பங்கு என்று வரும் பொழுது, சஞ்சீவ் குப்தா என்ற நபர் தன்னுடைய வருமானம் மற்றும் சொத்து பற்றிய அனைத்து தகவல்களையும் மறைத்திருக்கிறார். அதைப் பற்றிய உண்மையான விவரங்கள் கோரி மனைவி தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம் செய்திருக்கிறார்.

Direct Agents for sale of Postal Life Insurance products in chennai
காட்சிப் படம்

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுன்படி கணவர் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் சம்பாதித்த மொத்த வருமானம் எவ்வளவு, அதாவது வரி பிடித்தம் செய்வதற்கு முன்பாக மொத்த வருமானம் எவ்வளவு என்ற தகவலை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி தகவல் அறியும் சட்டத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இது மேலோட்டமாக பார்க்கும் போது வேடிக்கையாக தெரியலாம்.

Also Read : 9 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்பின் அதே இடத்தில் அதே பெண்

ஆனால் கணவரின் வருமானம் மற்றும் சொத்து அடிப்படையில் தான் மனைவிக்கு அவருடைய ஜீவனாம்சம் அல்லது அவருக்கான மாதாந்திர செலவு ஆகியவை வழங்கப்படும் என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சஞ்சீவ் குப்தா இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தன்னுடைய வருமானம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த மறுத்துவிட்டதால், வருமான வரித்துறை மற்றும் பொதுத்தகவல் வெளியீடு ஆகிய இரண்டு துறைகளுமே அந்த பெண்ணின் கோரிக்கையை ரத்து செய்துவிட்டது.

இந்த முடிவால் மனமுடைந்து போன குப்தாவின் மனைவி மேல்முறையீடு செய்திருக்கிறார். ஃபர்ஸ்ட் அப்பல்லேட் அத்தாரிட்டியுடன் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதன் பிறகு சென்ட்ரல் இன்ஃபர்மேஷன் கமிஷன் உடன் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு மேல்முறையீடு செய்த அந்தபெண்ணின் கோரிக்கையை CPIO ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தப்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றுப்படி, கணவரின் கடந்த இரண்டாண்டு மொத்த வருமான விவரங்களை வழங்குமாறு உத்தரவு வழங்கியுள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: Trending, Viral