தேனிலவுக்குச் சென்ற இடத்தில் எரிமலையில் சிக்கிய கணவர்! பாய்ந்து காப்பாற்றிய புது மனைவி

பலத்த காயமடைந்த கிளேவிற்கு கழுத்து பகுதியில் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.

தேனிலவுக்குச் சென்ற இடத்தில் எரிமலையில் சிக்கிய கணவர்! பாய்ந்து காப்பாற்றிய புது மனைவி
எரிமலைக்குள் சிக்கிய கிளே
  • News18
  • Last Updated: July 28, 2019, 6:10 PM IST
  • Share this:
கரீபியன் தீவில் தேன்நிலவுக்கு சென்ற போது எரிமலைக்குள் சிக்கிய கணவரைக் கடும் போராட்டத்துக்கு பின் மீட்ட மனைவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த கிளே, தனது மனைவி அகைமியுடன் செயின்ட் கீட்ஸில் உள்ள எரிமலைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

செயல் இழந்த எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் உள்ளது. அதன் உச்சிக்கு புதுமண தம்பதியினர் பயணம் சென்றுள்ளனர்.


அப்போது, அங்குள்ள குகைக்குள் இறங்கும் முயற்சியில் கிளே, தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அகைமி கடுமையாக போராடி கணவரை மீட்டதுடன், தனியாளாக தூக்கிக்கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.பலத்த காயமடைந்த கிளேவிற்கு கழுத்து பகுதியில் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கிளே தனது மனைவியின் செயலை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அகைமியின் இந்த துணிகர செயலைக் கேட்டு அனைவரும் வியப்படைந்துள்ளனர்.

First published: July 28, 2019, 6:10 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading