ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தேனிலவுக்குத் தாயுடன் சென்ற வினோத நபர் - கடுப்பாகிய மனைவி!

தேனிலவுக்குத் தாயுடன் சென்ற வினோத நபர் - கடுப்பாகிய மனைவி!

தேனிலவுக்குத் தாயையும் கூட்டிக்கொண்டு வந்த கணவர் மேல் எரிச்சல் அடைந்துள்ளார் மனைவி.

தேனிலவுக்குத் தாயையும் கூட்டிக்கொண்டு வந்த கணவர் மேல் எரிச்சல் அடைந்துள்ளார் மனைவி.

ஒரு நபர் தேனிலவுக்குத் தனது மனைவியை மட்டும் அழைத்துச் செல்வதோடு தனது தாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இது பெரும் எரிச்சலை அந்த மணப்பெண்ணிற்கு ஏற்படுத்தி உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

புதிதாகத் திருமணமான தம்பதிகள் தனியாக நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகச் செல்லக் கூடிய நிகழ்வு தான் தேனிலவு. யாராக இருந்தாலும் திருமணமான சில நாட்கள் வரை தங்கள் இருவருக்கும் தனி இடம் வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், இங்கு ஒரு நபர் தேனிலவுக்குத் தனது மனைவியை மட்டும் அழைத்துச் செல்வதோடு தனது தாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இது பெரும் எரிச்சலை அந்த மணப்பெண்ணிற்கு ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவில் ட்ரேசி மற்றும் பிரையன் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். இவர்கள் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். ஒற்றைத் தாயின் மகனாக இருந்ததால், ட்ரேசியின் மீது அதிக மரியாதையை பிரையன் வைத்திருந்தார். இருப்பினும், பிரையன் அவரது தாயார் ஜெய்னையும் தேனிலவுக்கு அழைத்துச் சென்றது தான் இங்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இவர்கள் காதலித்த நாட்களில் இவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியின் போது தனக்குப் பிறந்த மகனைப் பற்றி பிரையனிடம் சொல்ல ட்ரேசி தொடக்கத்தில் பயந்துள்ளார். அதனை புரிந்துகொண்டு அவர் பொறுப்பேற்று திருமணச் செய்துள்ளார்.

Also Read:பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்.. எங்கு என்று 18 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

பிரையன் தனது திருமண நாளில் தனது தாயான ஜெயினுக்கு ஒரு "சிறப்பு நாளாக" இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார். திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கு ட்ரேசி மற்றும் பிரையன் செல்வதாக இருந்தது. ஆனால், ஜெயினின் புதிய கணவர் ஹவாயில் இருந்ததால் அவருடன் ஜெயின் தேனிலவுக்குச் செல்ல விரும்பினார். எனவே பிரையன் இதற்காகச் சம்பந்தம் தெரிவிக்கவும் விதமாக "நாம் அனைவரும் ஒன்றாகத் தேனிலவுக்குச் செல்லலாம், பின்னர் அவரவர் இரவுகளை அவரவர் அனுபவிக்கலாம்" என்று தனது திட்டங்களை வெளிப்படுத்தினார்.

ஆனால், இதற்கு ட்ரேசி ஒப்புக்கொள்ளவில்லை. "முதலில் நான் என் திருமண நாளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இப்போது நான் என் தேனிலவுக்குச் செல்ல வேண்டும். என் வாழ்நாள் முழுவதும் இந்த நாளிற்காக நான் அதிகம் காத்திருந்தேன். எனவே நமது தேனிலவு தான் நடக்க வேண்டும்" என்று டிரேசி பிறையினிடம் கூறியுள்ளார். இருப்பினும் தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, பயணத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்ள உதவும் வரை ஜெய்ன் தம்முடன் இருக்கலாம் என்று பிரையன் ட்ரெஸியிடம் கேட்டுக் கொண்டார். ஒரு வழியாக இறுதியில் ட்ரேசி ஒப்புக்கொண்டார்.

Also Read:வீட்டில் சிலந்திகள் இருந்ததால் வீட்டை எரிக்க யோசனை கேட்ட இளைஞர்.. இணையத்தில் வைரலான பதிவு.

இருப்பினும், ஜெய்ன் வேறுசில திட்டங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது என்று ட்ரேசி குறிப்பிடுகிறார். அவர் நினைத்தது போலவே புதிதாகத் திருமணமான இவர்கள் செல்கின்ற எல்லா இடங்களுக்கும் ஜெயின் வந்து கொண்டிருந்தார். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ட்ரேசி கடும் கோபத்தைக் கொண்டார். குழந்தையைப் பராமரிக்க மட்டுமே அவரை இங்கு அழைத்து வந்ததாகவும், இது போன்று செய்வது நன்றாக இல்லை என்பதையும் ட்ரேசி ஜெயினிடம் காட்டமாகக் கூறியுள்ளார்.

திருமணமான புதிதில் கணவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுடன் ஆசைப்படுவதைத் தான் ட்ரேசியும் ஆசைப்படுவதாகவும் ஆனால், பிரையினின் தாயார் இது போன்று செய்தது எந்த பெண்ணாக இருந்தாலும் கோபத்தையும், எரிச்சலையும் வரவழைக்கத் தான் செய்யும் என்றும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

First published:

Tags: Couples, Honeymoon, Mother-in-law