மனைவியால் வந்த வினை... போலீஸிடம் மாட்டிக்கொண்ட கணவன்!

மனைவியால் வந்த வினை... போலீஸிடம் மாட்டிக்கொண்ட கணவன்!

போலீஸிடம் மாட்டிக்கொண்ட கணவன் மனைவி

டெல்லியில் காருக்குள் இருந்தால் கூட முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லியில் மாஸ்க் போடாமல் காரில் சென்றதற்கு மனைவியே காரணம் என போலீஸிடம் கணவர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிர்பார்ப்புக்கு விஞ்சிய வகையில் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. டெல்லியில் காருக்குள் இருந்தால் கூட முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் தரயங்கஞ் (Daryaganj ) பகுதியில் காரில் சென்ற இளம் தம்பதியினர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றியுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், முகக்கவசம் அணியாதது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், தம்பதியினர் பங்கஞ் குப்தா மற்றும் ஆபா குப்தா ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் பங்கஞ்ச் குப்தாவின் மனைவி ஆபா குப்தா, தன்னுடைய கணவருக்கு முத்தம் கொடுப்பேன், உங்களால் தடுக்க முடியுமா? என்றெல்லாம் வினவத் தொடங்கினார். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அப்போது, பேசிய பங்கஞ்ச் குப்தா, காரில் வெளியே புறப்படுவதற்கு முன்பு தனக்கும், மனைவிக்கும் இடையில் மாஸ்க் அணிவது குறித்து சண்டை எழுந்ததாக தெரிவித்துள்ளார்.

காருக்குள் இருந்தவாறு மாஸ்க் அணிய தேவையில்லை என அவர் வற்புறுத்தியதன்பேரில் மாஸ்க் அணியாமல் காரில் பயணம் செய்ததாகவும், அப்போது காவல்துறையினரின் சோதனையில் சிக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார். காவல்துறையினரையும் தனது மனைவியின் தூண்டுதலின்பேரில் திட்டிவிட்டதாக தெரிவித்துள்ள பங்கஞ்ச் குமார், காவல்துறையினர் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

Also read... கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் நானும் இதேபோன்று தான் நடந்துகொள்வேன்... ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ!

சாலையில் காவல்துறையினருடன் நடந்த வாக்குவாதங்களுக்கு தன் மனைவியே காரணம் என்றும் காவல்துறையினர் முன்னிலையில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். கொரோனா வேகமாக பரவி வரும் மாநிலங்களுள் டெல்லியும் ஒன்று. அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அடுத்த வார வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை முழு ஊரங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதுபோல் இரண்டாவது அலை கொரோனா வைரஸையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அமலில் இருக்கும் மிகச்சிறிய லாக்டவுன் என தெரிவித்துள்ள கெஜ்ரிவால், புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியை விட்டு சென்றுவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: