Viral Video: நடுபஜாரில் கணவரை விரட்டி விரட்டி அடித்த மனைவி... மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

வைரல் வீடியோ

பஜாரின் நடுவே பெண் ஒருவர் கணவரை விரட்டி விரட்டி அடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

  • Share this:
    கணவன் - மனைவி சண்டை என்பது எப்போதும் வழக்கமான ஒன்று தான். வீட்டிற்குள் அவர்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் அது அவர்களுக்குள் முடிந்து விடும். ஆனால் வீதி வரை வந்து விட்டால் அது சற்று மனகசப்பாக அமைந்துவிடும். அதுவே சில சமயங்களில் எல்லைமீறி கைகலப்பு வரை சென்றுவிட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

    மத்திய பிரதேச மாவட்டம் தாமோ மாவட்டத்தில் கணவன் - மனைவி சண்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் இருப்பவர் ராஜ்புத் மற்றும் அவரது மனைவி பூர்ணா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில் பஜார் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த சண்டை நடைபெற்றுள்ளது.



    கணவன் - மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்து உள்ளது. பெண் அவரது தந்தை உடன் இணைந்து அவரது கணவரை விரட்டி விரட்டி அடித்துள்ளார். இதில் அந்த நபரின் சட்டை கிழிந்தது. அப்போதும் அந்த பெண் அவரை விடவில்லை.

    கூட்டம் அதிகமுள்ள சாலையில் இவர்கள் சண்டையிட்ட காட்சியை பலர் படம் பிடித்துள்ளனர். திடீரென சண்டை ஏற்பட்டதால் வேடிக்கை பார்க்க பலர் கூடியதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இறுதியாக காவல்துறையினர் தலையிட்டு இருவருக்கும் சமரசம் செய்து வைத்தனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: