மக்கள் தங்கள் உலகக் கண்ணோட்டங்களைத் தொடர்ந்து மாற்றுவதால், உறவுகளில் ஒரே மாதிரியான சிந்தனை ஓட்டம் இருப்பதில்லை. இதுவும் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றது. ஆனால் தங்கள் விருப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் பாரம்பரிய 'ஹோம்மேக்கர் மனைவி' முறையைத் தொடர்ந்து பின்பற்றும் குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில், ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்தால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு அப்பெண்ணுக்கு அவர் பணம் செலுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது போன்ற பல்வேறு உறவு ரீதியான வினோத நடைமுறைகளை சமீப காலமாக நாம் கேட்டு வருகிறோம். ஏன் இந்த பெண் இது போன்ற ஒரு நிபந்தனையை வைத்தார் என்பது தான் பலருக்கும் கேள்வியாக இருக்கும். இதற்கு இப்பெண்ணே தீர்க்கமான காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.
வேலையை விட்டுவிட்டு இல்லத்தரசியாக மாறியதால், தனது கணவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துள்ளார். இதன்படி, அவர்கள் எப்போதாவது பிரிந்தால், அவரது பணியில் (CV) உள்ள நீண்ட இடைவெளியை அவர் ஈடு செய்யும் விதமான 15 ஆண்டுக்கான பணத்தை அவர் தர வேண்டியது தான் இந்த ஒப்பந்தம். சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்ட இவரின் பதிவை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், சிலர் இதை சர்ச்சைக்குரியதாகவும் பார்க்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அப்பெண்ணை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து, அப்பெண் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இவர் தனது டிக்-டாக் பக்கத்தில் தனது ஒப்பந்தத்தின் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 63 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. விவாகரத்துக்குப் பிறகு தனக்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் செய்ததாக அந்தப் பெண் விளக்கி பதிவிட்டுள்ளார். இது மிகவும் சரி என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்பெண் இது குறித்து மேலும் கூறுகையில், "நான் வீட்டில் இருக்கும் சாதாரண மனைவியாக இருக்க வேண்டும் என்று என் கணவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், மேலும் அவர் என்னை எதிர் காலத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்யவிருந்தால். விவாகரத்துக்குப் பிறகு 15 வருடங்கள் வரை அவர் எனக்குப் நஷ்ட ஈடாக பணம் செலுத்த வேண்டும். எனது பணியின் இடைவேளையை இது ஈடுசெய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார். இதுவரை, இப்பதிவிற்கு 8,500-க்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் இப்பெண்ணின் யோசனையைப் பாராட்டி வருகின்றனர்.
அதில் ஒருவர் "இது அறிவார்ந்த முடிவு மற்றும் இது இயல்பாக்கப்பட வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்னொரு நபர், "நான் ஒரு மனிதன் என்பதால், இது சரியான அர்த்தமுள்ள முடிவாக நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவதாக ஒருவர், "ஆண்களுக்கு இது போன்று நடந்தால், வீட்டிலேயே அம்மாவாக இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியும்" என்று பதிவு செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.