முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உங்கள் போன் ஸ்கீரின் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டதா? ஒரே தீர்வு இதுதான்

உங்கள் போன் ஸ்கீரின் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டதா? ஒரே தீர்வு இதுதான்

உங்கள் போன் ஸ்கீரின் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டதா?

உங்கள் போன் ஸ்கீரின் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டதா?

உங்கள் செல்போன் டிஸ்பிளே நிறம் மாற ஆரம்பித்தால் சில சந்தேகங்களுக்கு தீர்வு பெற “purple screen on Android” என கூகுள் செய்து பார்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில் கையில் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாமல் இருப்பவர்கள் சிலர் மட்டுமே. தற்போது அனைவரது கையிலும் விதவிதமான ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் டேப், லேப் டாப் ஆகியவற்றைக் காண முடிகிறது. அதுவும் சோசியல் மீடியாவில் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறையினர் என்றால் சொல்லவே வேண்டாம் அவர்களுக்கு எல்லாமே கையில் இருக்கும் ஸ்மார்ட்போன். ஒருவேளை அந்த ஸ்மார்ட் போன் கீழே விழுந்துவிட்டது என்றால், ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது போல் துடிதுடித்து போவார்கள்.

உங்கள் ஆண்ட்ராய்டு போன் தற்செயலாக கைதவறி கீழே விழுவது என்பது, அந்த சாதனத்தில் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய மோசமான விஷயங்களில் ஒன்றாகும். அப்படி ஸ்மார்ட் போனை கீழே போட்ட யூஸர்களில் பலரும் சிறிது நேரம் கழித்து அது, அதன் திரையில் ஒரு சிறிய ஊதா நிறம் தோன்றியதை காண்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, திரையின் பாதி ஊதா நிறமாக மாறி, பயன்படுத்த முடியாததாகிவிடும். உங்கள் மொபைலின் திரை ஏன் ஊதா நிறமாக மாறுகிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

ஆண்ட்ராய்டு ஸ்கிரீன் கலர் மாறுவதை சரி செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு போனின் ஸ்கிரீன் ஊதா நிறத்திற்கு மாறி இருந்தால், அது கடுமையாக சேதமடைந்திருப்பதை குறிக்கிறது. திரை உட்புறமாக மோசமாக சேதமடைந்துள்ளதையும், திரவ படிக காட்சி எனப்படும் எல்டிசி டிஸ்பிளே உடைத்திருப்பதையும் குறிக்கிறது. இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை.

அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்க்கும் கடைக்கு சென்று உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்வது பாதுகாப்பான வழியாகும். இதுபோன்ற பெரும்பாலான சிக்கல்களில் டிஸ்பிளே ஸ்கிரீனை மாற்ற வேண்டி வரும். அதற்கு அதிக அளவில் செலவாகும் என்பதால், அப்படியொரு முதலீடு செய்யும் அளவிற்கு உங்கள் போன் தகுதியானதா? அல்லது புதிதாக டிஸ்பிளே மாற்றுவதற்கு பதிலாக புது போனையே வாங்கிக்கொள்ளலாமா? என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். திரையில் உள்ள திரவ படிக காட்சி அடுக்கு சேதமடைய சில நாட்கள் ஆகலாம், சில நேரங்களில் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே ஊதா நிறமாக மாற பல நாட்கள் கூட பிடிக்கும்.

அப்படி உங்கள் செல்போன் டிஸ்பிளே நிறம் மாற ஆரம்பித்தால் சில சந்தேகங்களுக்கு தீர்வு பெற “purple screen on Android” என கூகுள் செய்து பார்க்கலாம். அதில் பல்வேறு வகையான கோளாறுகளும், அதற்கான தீர்வுகளும் இடம் பெற்றிருப்பதை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் குறிப்பாக ஹார்டுவேர் பிரச்சனை காரணமாக ஆண்ட்ராய்டு போனின் நிறம் மாறியிருந்தால் , செல்போனை ரீஸ்டார்ட் செய்வது, லேட்டஸ்ட் Android OS-யை புதுப்பிப்பது, கோளாறை சரி செய்யக்கூடிய ஆப்களை டவுன்லோடு செய்வது அல்லது செல்போனை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுப்பது ஆகிய செயல்பாடுகளை செய்ய முடியாது.

தரவை நகல் எடுக்க முயற்சிக்கவும்:

திரையின் சில பகுதிகள் பயன்படுத்த முடியாததாக இருந்தாலும், உங்கள் மொபைலை உங்கள் கணினியுடன் இணைத்து, அதில் உள்ள தொடர்புகள், படங்கள், பிற மல்டிமீடியா கோப்புகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் ஆகியவற்றை பிரதி எடுக்க முயற்சிக்கலாம். ஏனெனில் பழுதுபார்க்கும் போது அல்லது திரையை மாற்றும் போது எதிர்பாராத விதமாக ஏதாவது நடந்தால், ஸ்மார்ட்போனில் நீங்கள் பொக்கிஷமாக சேமித்து வைத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கிய தகவல்கள், ஆவணங்கள் ஆகியவை டெலிட் ஆகும் வாய்ப்புள்ளது.

எனவே முடிந்த அளவிற்கு செல்போன் ஸ்கிரீன் ஊதா நிறத்திற்கு மாற ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள தகவல்களை உங்கள் கணினி, லேப்டாப் அல்லது ஹார்டு டிஸ்கில் காபி செய்து கொள்வது நல்லது.

தீர்வு:

உங்கள் ஆண்ட்ராய்டு போனின் திரை ஊதா நிறமாக மாறினால், எல்சிடி டிஸ்பிளே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். தற்செயலாக உங்கள் ஸ்மார்ட்போனை கடினமான மேற்பரப்பில் போட்டு விட்டீர்கள் என்றால், இந்த சிக்கல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. சாப்ட்வேர் தொடர்பான சிக்கலை சரி செய்வது மட்டுமே ஒரே தீர்வு என்பதால், உடைந்து நொறுக்கிய அல்லது சேதமடைந்த செல்போன் டிஸ்பிளேவை மாற்றுவது மட்டுமே ஒரே தீர்வாகும்.

First published:

Tags: Android, Smart Phone