பெண் வழிகாட்டிகள்(guides) மற்றும் பெண் சாரணர்களின்(scouts) உலக சங்கம் (WAGGGS) ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 22 அன்று உலக சிந்தனை தினத்தை கொண்டாடுகிறது. இந்நாளில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 மில்லியன் பெண் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்காக சகோதரத்துவம், தோழமை மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டாடுகின்றனர்.
1922 இல் அமெரிக்காவின் சிறுவர்களுக்கான சாரணர்களை லார்ட் பேடன்-பவல் மற்றும் அவரது மனைவி லேடி ஓலவ் பேடன்-பவல் பெண் சாரணர் அமைப்பை உருவாக்கினர். இன்றைய பள்ளிகளில் ஸ்கவுட் மற்றும் கைடுகள் இருப்பதன் தொடக்கம் இங்கிருந்து தான் தொடங்கியது. அப்படி இருக்கையில் 1926 இல் அதன் நான்காவது பெண் சாரணர் சர்வதேச மாநாட்டில் சிந்தனை தினத்திற்கான விதை எழுந்தது.
கணவர் - மனைவி இருவரும் பிப்ரவரி 22 அன்று பிறந்தவர்கள் ஆதலால் அன்றைய தினத்தையே சிந்தனை தினமாகக் கொண்டாடத் திட்டமிட்டனர். அன்றில் இருந்து ஆண்டுதோறும் சிந்தனை தினம் பிப்ரவரி 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் பெண் சாரணர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசத்தையும் மரியாதையையும் நிலையான உறவுகளை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது. 1999 இல்அயர்லாந்தின் தூப்ளினில் நடந்த 30வது உலக மாநாட்டின் போது உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்களால் சிந்தனை தினமானது, "உலக சிந்தனை தினம்" எனப் பெயர் மாற்றப்பட்டது.
உலக சிந்தனை தினம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தங்களது கருத்துகளையும் பிரச்சனைகளையும் வெளிப்படுத்த ஒரு பெரிய வாய்ப்பை அமைத்து தருகிறது. அவர்கள் குறித்து விவாதங்களை நடத்தவும், உலகளாவிய அளவில் தீர்வுகளை வழங்கவும் வாய்ப்பளிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பணம் திரட்டுவது பெண் சாரணர்கள் மற்றும் பெண் வழிகாட்டிகளின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. WAGGGS இன் குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாக இந்த நிதி திரட்டும் கூறு இன்றும் தொடர்கிறது.
உலக சிந்தனை நாள் 2023: தீம்
உலக சிந்தனை நாள் 2023 இன் கருப்பொருள் 'எங்கள் உலகம், நமது அமைதியான எதிர்காலம்' ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்கால உலகத்திற்காக சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து ஒருவர் என்ன புரிந்து கொள்ள முடியும் என்பதையும், உலகெங்கிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க இயற்கையுடன் நாம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் ஆராய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Positive thinking, Women