Home /News /trend /

ஹாய் மக்களே.. ஐ அம் ரங்குஸ்கி.. உலக கொசுக்கள் தினம் இன்று..!

ஹாய் மக்களே.. ஐ அம் ரங்குஸ்கி.. உலக கொசுக்கள் தினம் இன்று..!

கொசு

கொசு

1897 ஆம் ஆண்டு கொசுக்களுக்கும் மலேரியா பரவுவதற்கும் இடையே உள்ள தொடர்பை சர் ரொனால்ட் ராஸ் கண்டறிந்தார். அவரைக் கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 20 அன்று கொசுக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மழைக்காலம் வந்துவிட்டாலே கார்ப்பரேஷன் , பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு கொசு மருந்து சாதனத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக வந்துவிடுவார்கள். தேங்கி இருக்கும் தண்ணியை அகற்றிவிட்டு மருந்தை ஊற்றி செல்வார்கள்.

காரணம் மழைக்காலத்தில் கொசுக்கள் அபரிமிதமாக வளரும். அதனால் மலேரியா, சிக்கன்குனியா, ஜிகா காய்ச்சல் போன்ற நோய்கள் உண்டாகும். இவ்வளவு சிறிய ஒரு கொசு கடித்து எவ்வளவு சிரமப்படுவது என்று அனைவரும் பயப்படுவர். அந்த கொசுக்களுக்கான தினம் இன்று..

வரலாறு:
1897 ஆம் ஆண்டு கொசுக்களுக்கும் மலேரியா பரவுவதற்கும் இடையே உள்ள தொடர்பை சர் ரொனால்ட் ராஸ் கண்டறிந்தார். அவரைக் கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 20 அன்று கொசுக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் தான், மலேரியாவை மனிதர்களிடையே பரப்புவது பெண் கொசுக்கள் என்று கண்டறிந்தார். ரோஸ் 1902 இல் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1500 முதல் இன்று வரை ஒளிப்படக் கருவியின் பரிணாமங்கள்...

1930களில் இருந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் மருத்துவரின் பணியைப் பாராட்டி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது. இதில் கொசுக்களின் பரவல் , அதனால் ஏற்படும் நோய் தொற்றுகள், கொசுவை விரட்டும் யுத்திகளை மக்களுக்கு சொல்லி வருகின்றனர்.

கொசுவால் ஏற்படும் மலேரியா போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளையும் இந்த நாள் சுட்டிக்காட்டுகிறது.

காலம் கடக்கும் கொசுக்கள்..

கொசுக்களின் எச்சிலில் உள்ள பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் வரும் மலேரியா, கிமு முதல் மில்லினியத்திற்கு முந்தைய வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், கிட்டத்தட்ட 30 மில்லியன் ஆண்டுகள் பழமையான கொசு எச்சங்களில் மலேரியா ஒட்டுண்ணிகளின் அறிகுறிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மலேரியாவால் 69,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 6,07,000 என அதிகரித்துள்ளது. மேலும், WHO ஆப்பிரிக்க பிராந்தியத்தில் மலேரியா விகிதாசாரத்தில் மிக அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலேரியா நோயாளிகளில் 95% பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதோடு உலக அளவில் மொத்த இறப்புகளில், 80% இறப்புகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று தரவுகள் குறிக்கின்றன.

வாட்ஸ்அப்பில் ஒருமுறை பார்க்கும் படங்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது!

கொசுவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள..
கொசுக்களால் பரவும் இந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்க, இந்த தடுப்பு நடவடிக்கைகளை நினைவில் கொள்ளுங்கள்:

  • வெளியில் செல்லும் போதெல்லாம் பூச்சி/கொசு விரட்டி பூசிக்கொள்ளுங்கள்.

  • நீண்ட கைகளை உடைய ஆடைகளை அணியுங்கள்

  • கொசுக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் போது அதிகாலை, மாலை நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

  • மாலை நேரங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வையுங்கள்.

  • வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுங்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Health, Mosquito, Mosquito bite

அடுத்த செய்தி